கேள்வியாய் பத்து குறள்

குறட்டாழிசை

உயிர்க் கொண்ட மனிதரை உணர்விலா
பொருளாய் ஆக்குமே பொருள். ----- (1)

பத்துக் குணமும் பணத்தைக் கண்டால்
கொத்தாய் கெட்டு விடும் ----- (2)

பணமும் நியாயமும் எதிராம் தமக்குள்
காப்போன் என்பவன் ஆபத்து. ----- (3)

எதையும் இனிமேல் வாங்கலாம் விலைக்கே
நவீனம் வளர்ந்த நிலையால். . ----- (4)

உறுப்பை மாற்றும் மருத்துவம் வளர்வால்
இறையின் நிலையில் கேள்வி. ----- (5)

நிறைய துன்பமும் அரிய மகிழ்வும்
இறையை அயிர்ப்பு இடம் . ----- (6)

நீரே மேகமாய் நெருப்பே கதிராய்
எங்குமே காற்றென பூமி. ----- (7)

கதிரின் அனலால் நீரும் மேகமாய்
ஊடகம் காற்றென உணர். ----- (8)

இயந்திரம் இயங்க எரிபொருள் வேண்டும்
மாண்டோர் எழவே எதுவாம். ----- (9)

மலைகளை சிதைக்க வந்தது இயந்திரம்
மீண்டும் ஆக்கவே வழியெது. ----- (10)
¬¬¬¬¬¬¬¬¬ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (5-Apr-21, 11:30 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 45

மேலே