தமிழுக்கு யென்செய்தாய்

அறுசீர் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்

பாட்டுப் புனைந்தாய். பாரதிமேல்
பாராட் டுசெய்தோம் பரிவாக

பாட்டுப் புனைந்தாய் தாசனையும்
பாராட் டுசெய்தோம் சரியாக

பாட்டால் எழுச்சி யவர்செய்தார்
தமிழர்க்கு பெரியார் யாதுசெய்தன்

பாட்டால் புகழ்தல் சரியாகா
தமிழா சிரிய ஐயன்மீர்

நேரிசை ஆசிரியப்பாக்கள்

யாதவன் புனைந்த செய்யுள் சொல்லும்
மாதவப் பெருமாள் புகழ்ந்தநாய் கனாவவன்
பரமனை புகழ்செய் பாவ லனாசொல்
யாது கலம்பகம் உலாவா செய்தது
ஏது செய்தான் தமிழில் எண்ணு
பெரியார் பாதை பெரியார் மண்ணாம்
பெரியார் தாசனாம் அவரும்
பெரிதாய் வாத்திகள் புகழ்வர் வீண்தானே

வீணன் அறியான் வெண்பா கலிப்பா
வேற்றுமை விருத்தம் துறையும் கொச்சகம்
வீணில் அவன்வழி வாத்திகள் சென்றதேன்
வீனில் நம்மையும் அவன்வழி இழுப்பதேன்
வாத்திகள் தமிழ்தமிழ் எனக்கூ விடுவன்
ஈசனைப் புகழ்து செய்யான் பாட்டு
ஈசனாம் அகத்தி ஏற்றிப் பாடான்
முருகை ஏற்றிப் பாடான் வாத்தி
காசுக்கு மாரடிப் பன்பார்
பிண்டம் தின்னும் பிடாரி வாத்தியாமே.......

எழுதியவர் : பழனி ராஜன் (5-Apr-21, 8:44 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 322

மேலே