இறைவன்
அதோ போகிறார் பார் அவர்
'திரை சங்கீத உலகில் ' நேற்றுவரைக்
கொடிகட்டி பறந்து வந்த மேதை
இன்றோ அவரை வரவேற்க
யாரும் இல்லையே..... அதோ
அந்த ' பேனரில்' காணும் இளைஞர்
அவரே இன்று மக்கள் கொண்டாடும்
'இசை ஞானி;.....
நாளை இனி வருபவர் யாரோ
யாரறிவார்.... சுழலும் கால
சக்கரத்தில் சிக்கிய மனிதன்
காணும் இன்ப துன்பங்கள் இவை
என்றும் புகழின் உச்சியிலேயே
'இருப்பவன்' 'அவன் ஒருவனே;
அவனே இறைவன் அறி மனமே