மறுபிறவி

உன் குழந்தையின் பிஞ்சி கால்கள் தரையில் தவழ,
நீ குழந்தையின் கரம் பிடித்து நடந்து காட்டு.

உன் குழந்தை ஆழகான தமிழ் சொற்களை உச்சரிக்க,
நீ குழந்தையிடம் இனிய தமிழில் உச்சரித்து காட்டு.

உன் குழந்தை ஒரு ஓவியமாக காட்சி அளிக்கிறாளா,
நீ குழந்தையிடம் ஒரு ஓவியனை போல் காட்சி அளி.

உன் குழந்தையின் நடையில் ஒரு நளினம் தெரிகிறதா?
நீ குழந்தையிடம் சேர்ந்து நடனம் கற்றுக்கொள்.

உன் குழந்தையின் குரலில் இசை புலப்படுகிறதா?
நீ குழந்தையிடம் சேர்ந்து இனிய வரிகளை பாடிக்காட்டு.

உன் குழந்தை விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடுகிறானா ?
நீ குழந்தையியின் கண்ணுக்கு விளையாட்டு வீரனாக தென்படு.

உன் குழந்தை சாதிக்க பிறந்தவனாக உருவெடுக்க,
நீ மறுபிறவி எடுத்துவிடு.

நீ விட்டு வந்த மிச்சத்தை,
உன் குழந்தையின் விறல் பிடித்து எழுந்து நில்.

எழுதியவர் : இரா. தெய்வானை (10-Apr-21, 3:50 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
Tanglish : marupiravi
பார்வை : 65

மேலே