வினாவாகுமோ உன் பார்வை 555

***வினாவாகுமோ உன் பார்வை 555 ***


பூ மகளே...


கோடைகால வறட்சி
ஊட்டி மலர் கண்காட்சி...

வாசம் வீசும் வண்ண
மலர்களுக்கு மத்தியில்...

பெயர் தெரியாத புதுமலரொன்று
உன்னை கண்டேன்...

மகரந்தத்தை தங்கி நிற்கும்
வண்ண மலர்கள்...

இரு வெள்ளி மீன்களை
கொண்டிருக்கும் புதுமலர்...

மலர்களுக்கு மத்தியில்
உன்னை கண்டேன்...

உன் மனதோடு
காதல் கொண்டேன்...

விலாசம்
கொடுத்து செல்வாயா...

வினாவாக
பார்வை வீசுவாயா...

மீண்டும் எப்போது
உன்னை காண்பேன்...

மீண்டும் நான்
உன்னை காணவேண்டும்...

என் இதய துடிப்பை
நீ கேட்க வேண்டும்...

வண்ண
மலர்களை சுவாசிப்பவளே...

என்னை
நீ நேசிப்பாயா...

வண்ண மலர்களோடு
காத்திருப்பேன் என்றும் உனக்காக.....***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (13-Apr-21, 9:37 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 137

மேலே