பொரியல் இங்க வாடாச் செல்லம்
பொரியல், இங்க வாடாச செல்லம்
■■■■■■■■■■■■■■■■■■■
யாரைத் தம்பி "பொரியல்"-னு கூப்படற?
@@@############
எம்.பையனைத்தான் அக்கா கூப்படறேன்.
@@##########@
,உம் பையன்.பேரு பொரியலா? என்னடா அநியாயம்? உன் மாமாவுக்கு பொரியல் இல்லாம உணவு தொண்டையில எறங்காது. நீ போயி உம் பையனுக்கு 'பொரியல்'னு பேரு வச்சிருக்கிறயே!
@@@@@@@@@@
அக்கா நான் வடமாநிலத்திலேயே நிரந்தரமாத் தங்கிட்டேன். எங்கூட வேலை பாக்கிற இந்திக்காரப் பொண்ணையே கல்யாணம் பண்ணிட்டேன். என் மாமனாருக்கு அவ ஒரே பொண்ணு. மனைவியை இழந்தவர். பொண்ணை செல்லமா வளத்துட்டாரு. அவ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கவேன்னு அடம்பிடிச்சா. அவ நெனச்சது நடைவேறுச்சு. அவளுக்கும் தமிழ் எழுதப் படிக்கக் கத்தாக் குடுத்துட்டேன். நாங்க வீட்டில பேசறது தமிழ்தான்.
@#####@@@#
ரொம்ப சந்தோசம்டா தம்பி. வடக்க போனவன் எங்களுக்கு சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணீட்டு அஞ்சு வயசு பையோனடா வந்திருக்கிறீங்க. அம்மா, அப்பா விபத்தில எறந்ததுக்கப்பறம் நாந்தான் உன்ன வளத்துப் படிக்க வச்சென். என்னோட ஒரே மகள் 'பொன்னி'யை உனக்கு கட்டி வைக்கலாம்னு ஆசைப்பட்டோம். அது நெறவேறுல. அவளுக்கும் நல்ல எடத்தில கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டோம். சரி, சரி.பழசெல்லாம் எதுக்கு? உம் பையனுக்கு ஏன்டா 'பொரியல்'னு.பேரு வச்ச?
@@@@@@@@
அக்கா, வடக்க 'போக்கிரியால்'னெல்லாம் பேரு வச்சுக்கிறாங்க. அந்த மாதிரி பேரா இருக்கட்டுமேன்னு எம் பையனுக்கு 'பொரியல்'னு பேரு வச்சேன். என் மனைவி இருவரும் குஷ்புவுக்கு இந்தப் பேரு ரொம்ப பிடிச்சுப் போச்சு.
@@@@#@#@@
என்னது உன் மனைவி பேரு 'குஷ்பு'வா?
@@#########
ஆமாக்கா. குஷ்பு-ன்னா நறுமணம்னு அர்த்தம்.
@@@#######@
ஈன்னம்மோடா தம்பி தமிழனாப் பொறந்து வளந்து வடக்க போயி இந்நிக்காரனா மாறிட்ட.
@@@@@####@||
எல்லாம் நடக்கறபடிதான் அக்கா நடக்கும். எம் பையன் பள்ளில மூணு மொழி படிக்கிறான். இந்திக்காரப் பையன்களே இந்தி சமஸ்கிருதத்தில் ஃபெயில் ஆகறாங்க. எங்க 'பொரியல்' எல்லாப் பாடத்திலயும் முதல் மாணவனா இராக்கிறான். அங்க இருக்கிற தமிழ்ச் சங்கம் நடத்தற தேர்வு எல்லாம் எழுதறான். அவுங்க குடுக்கிற சான்றிதழை நம்ம தமிழக கல்வித்துறை அங்கீகாரம் பண்ணிருச்சு. அங்கயும் குஷ்பு, பொரியலோட நான் தமிழனாத்தான் வாழ்ந்திட்டு இருக்கிறேன்.
@@@@@@#@@
|எங்கிருந்தாலும் வாழ்க"னு அறிஞர் அண்ணா கவியரசு கண்ணதாசனு வாழ்த்தின மாதிரி நானும் மாமாவும் உன்னை வாழ்த்தறோம்.
@@@@@@@@@
(மூவரும் அக்கா மாமா காலில் விழுந்து வாழ்த்து பெறுகிறார்கள்.