கருவின்றி மண்ணிலே

வெண்டுறை பா

உணர்வு பெறப் பெற்றவை யாதுமே
உணர்வு உள்ளோர் அல்லர் - மனதினுள்
இரக்கம் கொண்ட உயிர்களே பெரிதின்
உணர்வு பெற்ற உயிராம்.

உயிர்கள் என்பவைகள் யாவுமே உலகில்
உயிர்களை காக்கவே கருணை கொடுக்கும்
முறையிலே பயிரென ஆக்கப் பட்டதாம்
உயிர்களின் ஊன்று கோளென.

கருவின்றி மண்ணிலே பிறப்பிக்கப் பட்டவை
தருவென அழைக்கப் படுதலின் போலவே
கருப்பெற்று உருவான வைகளே - பகுத்தறியும்
அறிவைப் பெற்றவை யாம்.

பயிரேற்றி உணவாக்கி உயிர்கள் காக்கும்
உழவனே உலகின் கதிரவனில் உயர்ந்தோன்
அவனின் தொழிலை உதாசிப்போன் - உலகின்
இழிநிலை பிறப்பை பெற்றவன்.

அழியும் மனிதருக்கு ஆசைகள் அதிகமே
இயற்கை வளங்களை அழிப்பதில் முதனிலை
மனிதரில் ஈனத்து பிறப்பால் பிறந்த
இழிநிலை ஆறறிவு உயிராம்.
------ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (21-Apr-21, 9:34 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 34

மேலே