காதல் விபரீதம்

மலர்ச்சோலையில் தேன் சிந்தும் மாமலர்...
வண்டு ஒன்று அதை நாடி வந்தது
வந்து மலரின்மீது அமர்ந்தது
மலரின் மதுவெல்லாம் தீர உண்டபின்
மலரின்மேல் உறங்கி மயக்கம் தீர
வண்டு பறந்து போனது..... வேறு
மலர்தேடி இப்போது..... மாமலர்
பாவம் வாடி பொலிவிழந்து மண்ணில் வீழ
மண்ணில் எத்தனையோ அழகு மாந்தரின்
வாழ்வும் இப்படித்தான் பறிபோகிறது
மங்கையும் மலரும் ஒன்றே என்று
கவிதைபுனைந்த நான் இன்று சோலையில்
இந்த மலரின் குறுகிய வாழ்வைப்பார்த்து
நான் அழகை ரசிப்பதை விட்டு விட்டு
எதார்த்தம் மனதில் ஏற்றி நொந்தேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-Apr-21, 6:49 pm)
Tanglish : kaadhal VIPAREETHAM
பார்வை : 157

மேலே