அழகுக்கு அழகு செய்கிறாள்
என்னவளே
உன் நினைவுகள்
என் மனதில்
கொட்டி வைத்திருக்கும்
வைரக் குவியல்கள்...
உனக்காக எழுதப்பட்ட கவிதைகள்
ஏட்டின் மீது தெளிக்கப்பட்ட
வாசனைத்திரவியம்....
அழகு உன்னில்
ஊர்வலம் வருகின்றது....
என்னுடைய விழிக்கோ
நீ
ஒரு சலிக்காத
இயற்கை காட்சி......
உன்னை
படைத்தவனுக்கு
நன்றி சொல்கிறேன்....
இல்லையென்றால்
நான் கவிஞனாக
இருந்திருக்க முடியுமா?
பசிவந்தால்
பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள்...
ஆனால்
எனக்கு ஒன்பது தான்
பறந்து போகிறது
ஒன்று இருக்கிறது
அது
உன்னுடைய நினைவுகள் தான்...
உன்னுடைய
சிரித்த முகத்தை பார்த்தாள்
என் இதயம்
ஒரு பனிக்கட்டியாக மாறிவிடுகிறது
அழகிய கோவிலில்
ஆண்டவன் ஏற்றிய
அதிசய தீபம் நீ....
என்னுடைய கவிதையில்
நீ பிறக்கவில்லை....
உன்னால்தான்
என் கவிதைகள் பிறக்கின்றன...
அழகுக்கு
நீ
அழகு செய்கிறாய்...!!!
கவிதை ரசிகன்

