என் காதல் ரோஜாவே 555

***என் காதல் ரோஜாவே 555 ***
காதல் ரோஜாவே...
கடவுளை தரிசிக்க
கூட்டமாக மந்தரை பூ...
மங்கை அவளை தரிசிக்க
சரம் சரமாய் மல்லிகை...
மகரந்தத்தை வெளிக்காட்ட
ஒருவரி செம்பருத்தி...
காதலை வெளிப்படுத்த
நீ ஒற்றை ரோஜா போதும்...
உலகமெங்கும் காதலை
பரிமாறிக்கொள்ளும்...
உயிருள்ள
அழகு ரோஜா நீ...
நேசிக்க நேசிக்க
காதல் அதிகமாகும்...
உன்னை பரிமாறிக்கொள்ள
உன் நிறமும் அதிகமாக...
உன்னையும் மனிதன்
காதலிப்பதால்தான்...
உனக்கும் பல நிறங்களில்
பரிணாமவளர்ச்சி...
காலை
கதிரவன் போல செந்நிறம்...
மாலை
கதிரவன் போல இளம்சிவப்பு...
கரையில்லா
வெண்மேகம் போல வெண்ணிறம்...
மங்களமான
உன் மஞ்சள் நிறம்...
நேற்று பார்த்தேன்
உனக்கு ஊதா நிறம்...
இன்று ஒரே இதழ்களில்
வெண்மையும்செந்நிறமும்...
மலர்ந்ததும் வாடிவிடும்
மலர்களுக்கு நடுவில்...
நீ முழுவதுமாக
மலர எட்டு நாள்...
காதல் சொல்லி எட்டு திங்கள்
கடந்தும் பதில் இல்லை சிலருக்கு...
உன் இதழ்கள்
மட்டுமா மென்மை...
உன் உமிழ்நீரை பிரித்தெடுத்தால்
பாவைகளுக்கு அழகு சேர்க்கும்...
மங்கள வீடுகளில்
வாசனை பன்னீராக...
உன் அழகை பாதுகாக்க
எத்தை முட்கள் உன்னை சுற்றி...
முட்களை மறந்து
உன்னையே ரசிக்கிறோம்...
காதல்
தூதின்
தூதின்
காதல் மலரே...
பலவண்ணம் கொண்ட
அழகு காதல் ரோஜாவே.....