கவிதை

என் குட்டி அம்மா

சின்ன இடையிலே
என்னை வைத்துக் கொள்.
கன்னக் குழியிலே
முத்தம் பதித்துக் கொள்.
வண்ணச் சேலைக்குள்
என்னை ஒழித்துக் கொள்.
என் வயிறு நிறையும் வரை
சற்றுப் பொறுத்து கொள்.
என்னை நினைத்து
ஒரு ராகம் இசைத்துக் கொள்.
அந்த ராகத்தில்
சோகம் அழித்துக் கொள்.
பிறகு என்னை தூக்கி
தொட்டிலில் இட்டு செல்....

எழுதியவர் : Gthi² (30-Apr-21, 11:56 pm)
சேர்த்தது : Ganapathi Gthi
Tanglish : kavithai
பார்வை : 142

மேலே