அமிழ்தமாம் காதல்

உடும்பெனப் பிடியுடன் இறுக்கி அணைத்து
உடலோடு உடலின் சூடு கலந்திட செய்து
பழம் போன்ற கன்னத்தில் முத்தம் பதித்து
நெடு வளர்ந்த கூந்தலில் நீள் விரல் நுழைத்து
கவின்மிகு கண்களில் காதல் பார்வை பார்த்து
இதழின் அழகில் இருக்குமிடம் மறந்து
தகதகக்கும் கழுத்தினில் முகந்தனை பொதித்து
இவ்வுலக எழிலாளின் நிறை ஒப்புதலோடு
இடுப்பைப் பிடித்து இரு கையால் தூக்கி
மார்போடு அணைத்து மதியும் குளிர்ந்து
நடுங்கும் இரு உடலும் விதிர்விதிர்த்தாட
பரவச நிலையில் இருப்பதே காதலாம்
இந்நிலைக்கு உலகில் இணை என்பது இல்லையாம்
இது போல் தினமும் காதல் தொடர்ந்தால்
ஆயுள் கூடுமாம் இந்நிலையே அமிழ்த நிலையாம்.
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-May-21, 6:30 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 123

மேலே