கோடை காலம்

கோடை என்றால் குதூகலம் அப்போது
கிராமம் மனதில் வந்து போகிறது
கோடை வெயில் குளிர்நிலவாய் தோன்றியது
குளிர் தேசம் தேடவில்லை மனது
அக்னி நட்சத்திரம் அணுவளவும் சுடவில்லை
அன்மை கால பெற்றோர் போல
அப்பா அம்மா அட்டவணை போட்டு அனுப்பவில்லை
அதிகாலை நீச்சல் மதியம் கம்ப்யூட்டர்
அந்தி நேரம் மண்பாண்ட ஓவியமென்று
அதிகாரம் எங்கள் கையில் அப்போதே
அருவியில் ஆற்றில் ஆனந்த குளியல்
கோவில் மைதானம் எங்களது சேப்பாக்கம்
கபடி கிட்டிப்புள் கிரிக்கெட்டை ஓரங்கட்டியது
கிராமத்து விளையாட்டுக்கு ஈடுஇணை இல்லை
பட்டம் விட்டோம் அப்போது வான்வெளியில்
பத்தாம் வகுப்பிலேயே எப்போதோ வாங்கும்
பட்டத்துக்கு தொலைக்கிறார்கள் இளமையை இப்போது
படிப்பு கோடையின் குதூகலத்தை முழுங்கியது

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (3-May-21, 10:11 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
Tanglish : kodai kaalam
பார்வை : 60

மேலே