செயற்கை இதயம்
செயற்கை இதயம்
செய்தே பொருத்தப்பட்ட இதயம்
செயல்பட்டு போகாமல் இருப்பதை தடுக்க
பொருத்தப்பட்ட
மாற்று இதயம்
செய்யாததை எல்லாம்
செய்து
தேசம் செய்து விட்டு
செயற்கை சுவாசத்தை தேடும் இதயம்
சுவையான வாழ்க்கை யை
சுட்டெரித்துவிட்டு
சூடுபோட்டுக்கொண்ட
மனிதனின் சுருங்கி விரியாத இதயம்
சுகபோக வாழ்க்கையால்
சூம்பிப்போன இதயம்
சுற்றுப்புற சூழல்
மாசுபட்டு
சுத்தமான காற்று வராமல்
நச்சு காற்றால்;
மூச்சிக்குழல் பழுதடைந்து
நுரையீரலில் தங்கிய விஷப்படிமங்களால்
பாதிக்கப்பட்ட இதயம்
துடிப்பைத் தேடும்
செயற்கை இதயம்
சதாவதை தடுக்க
செய்து பொருத்தப்பட்ட
செயல்பாட்டு இதயம்
வளி மண்டலப் பாதிப்பால்
உன் விஷமத்தின் விளைவால்
வந்த விஷக் காற்றுக்கு உன்னை செயலற்கு போக்காமல் இருக்க
நீ தேடிய காற்றே
செயற்கை சுவாசம்
நச்சுக் கிருமியின் தாக்கத்தால்
இருமி இருமி
நசுக்கப்பட்ட இதயம்
தேடுது செயற்கை சுவாசம்
பிராணம் பிரியாமல் இருக்க
பிராணவாய்வை உருவாக்கும்
இயற்கையின்
இதயமான மரம் செடி கொடிகளை
சுத்தமாக அழிக்காது சுவாசிக்க விடு
சோறு மட்டும் போடவில்லை இயற்கை
உன்னை சுவாசிக்க வைக்கும் இதயமே
அவைகள்
உன் கையால்
உனக்கே சூனியம் வைத்துக் கொள்ளாதே
செயற்கை இதயம்
செயல் இழக்கும்
இயற்கை இதயம்
என்றென்றும் உன்னையும்
உலகையும் காக்கும்
அ. முத்துவேழப்பன்

