இதய இறுக்கம்

இருண்ட இதயம்
உருண்ட நாட்கள்
உறக்கம் இல்லாத
தவித்து
உதிர்த்த சோகம் உடன் வரும் இதயதில் இறுக்கம்

ஓடும் இரத்த வெள்ளம்
உடன் பிறந்தோர் மரணம்
உவாதையின் பிடி
ஒவ்வாமை
உடன் தருமே
இதயத்தில் இறுக்கும்

தேடிய ஆசை
தட்டிப்போன வெற்றி
தொட்டுத் தழுவிய ஏக்கம்
தொடரும் இதய இறுக்கம்

சதிகாரன் செயல்
சகிக்கமுடியாத
மனக்கசப்பு
தரும் இருக்கம்

இளகிய மனது
இனம் தெரியாத தவிப்பு

பொறுக்க முடியாத
கோபமே
வெடித்து
கனக்க வைக்கும் இதயத்தை

முயற்சியன் தோல்வி
முயலாத வெற்றி
இயலாத துவக்கம்
எல்லாம் இதயத்திற்குத் தரும் அழுத்தம்

சுயநலம் பொறாமை
சூது கபடம் பாவம்
பழிவாங்கும் வெறி
எல்லாம்
வஞ்சம் நிறைந்த உலகில்
வந்தே முடக்கும் இதயத்தை

பொருமை இழந்த மனம்
பேயாய் ஆட்டிப்படைக்கும் பேராசை
நெஞ்சை பிடிக்கும் நிறாசைகள்
விரக்தி
சுடும் சொல்யாவும்;
கனக்க வைக்கும் இதயத்தை
உருகிய மனமே
இறுகிய இதயமே
பதுங்கும் மனமே
படுத்தும் நினைவே
ஓடும் தவிப்பே
ஓலமிடும் நெஞ்சே
ஒடுங்கிய இதயமே
உழண்டதுபோதும்
உருகியதுபோதும்
இறுகியதுபோதும்

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (9-May-21, 9:46 am)
Tanglish : ithaya irukkam
பார்வை : 342

மேலே