ஒரு கோழியின் புலம்பல்

கணம்பார்த்து பணங்கொடுத்து நீவாங்க
தினம்பார்த்து தீனியெடுத்து நான்பழக
கொண்டைவைத்த சேவலது யென்
மண்டைகொத்தி தான்கொடுக்க
வாந்தியெடுத்து வைத்தியம்பார்க்க
மனிதயினமில்லை ....
காந்திப்பணங்கொடுத்து கூடுதல் கரிசனங்கேட்க காவலாளியாருமில்லை ....
பெட்டியிட்டு நீயடைக்க
முட்டையிட்டு நான்மறைக்க ...
நித்தமொன்று சத்தமில்லாமல்
தான்வைத்தேன் வட்டமென ....
தீனியதையும் தள்ளிவைப்பேன்
தன்னுடல்சொல்லாத சட்டமென ....

முத்தமொன்று தாங்கொடுப்பேன்
விரிசலேதும் விழாமல் .....
பத்திரமாய்தான் காப்பேன்
பக்கம்யாரும் வராமல் .....

கொத்திய சேவலது
கூவியுனை எழுப்பிவிட
உடல்முறித்து நீயென் அட்டிதிறக்க ...
மொத்தமாய் கச்சிதமாய் மூடியும்
வைக்கோலில் விழுந்த வைரமதை
எப்படிக் கண்டாயோ ....
கனைத்த குரலில் நானெச்சரிக்க
கவலைகொள்ள உன்கரமது
யெனை தட்டிவிட்டு
யென் முத்துகளை தானெடுக்க .....


மசக்கையறியா ஆணினம்
அது பரவாயில்லை ....
அவனுடல் சேரும் பெண்ணினம்
அதுகூட எனைக்காக்க
வரவில்லை .....

கூட்டஞ்சேர்க்க தெரிந்திருந்தால்
கோட்டையறியும்படி போராடியிருப்பேன் ....
கோவங்கொள்ளத் தெரிந்திருந்தால்
தலைக்கொத்தியுமை நீங்கியிருப்பேன் ....

கொடிபிடித்துப் போராட
கோழிகளுக்கு அனுமதியில்லாததால்
பெட்டியிருளுக்குள்
புலம்புகிறேன் ......

எழுதியவர் : என்.கே.ராஜ் (13-May-21, 9:41 pm)
சேர்த்தது : Raj NK
பார்வை : 157

மேலே