கொரோனா - தீநுண்மி

புலம்பெயர்ந்து வந்தாயோ
பூமி பிளந்து வந்தாயோ

நீரில் நீந்தி வந்தாயோ
நீண்டநாள் தங்கி இருப்பாயோ

நீ சுவைக்க என்சுவை
உணர்வை அழிப்பாயோ

நீ சுவாசிக்க என்சுவாச
உறுப்பை கெடுப்பாயோ

அகந்தையில் வாழும் மானிட
இனமழிக்க மாறுவேடமிட்டு வந்தாயோ

ஆளுக்கொரு சாதிவைத்து அதுதானே
அழியும் என்பதை மறந்தாயோ

சிதறி கிடக்கும் இனத்தை சேர்த்து
இணைக்க இங்கு வந்தாயோ

பதற வைத்து மானுட ஒற்றுமை
காண ஓடோடி வந்தாயோ

எங்களிடம் எங்களினம் அழிக்கும்
அணுகுண்டு ஆயிரம் உண்டு

எங்களினம் அழிக்கவந்த உன்னை
அழிக்கவல்ல சிறுகுண்டு இல்லை

எழுதியவர் : சக்தி சுப்ரமணியன் (14-May-21, 9:43 pm)
சேர்த்தது : சக்தி
பார்வை : 87

மேலே