கோமாளி வாழ்க்கை

மனதிலே கவலைகளை
சுமந்துக் கொண்டு
"கோமாளி" வேஷம் போட்டு
மேடையில் ஏறி
கோமாளித்தனகள் புரிந்து
நம் கவலைகளை
சிறிது நேரம் மறக்க
செய்கிறான் "கோமாளி"...!!

மனிதர்களில் பலர்
வேஷம் எதுவும் போடாமல்
மேடையும் ஏறாமல்
மனதில் கவலைகளை
சுமந்துக் கொண்டு ...!!

"கோமாளி" போல்
வெளியில் சிரித்து கொண்டும்
உள்ளத்தில் அழுது கொண்டும்
"கோமாளி வாழ்க்கை"
வாழ்ந்துக்கொண்டு
இருக்கின்றார்கள் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-May-21, 11:10 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : komali vaazhkkai
பார்வை : 217

மேலே