புறங்கூறல் என்பது பொல்லாச் செயலாம் - இருகுறள் நேரிசை வெண்பா

குறட்பாக்கள்
புறங்கூறல் என்பது பொல்லாச் செயலாம்
அறவே ஒழிப்பாய் அறிந்து! 1
நல்லதையே எண்ணி நலமாக வாழ்ந்தாலே
இல்வாழ்க்கை இன்பாகும் இன்று! 2
- வ.க.கன்னியப்பன்
இருகுறள் நேரிசை வெண்பா
புறங்கூறல் என்பது பொல்லாச் செயலாம்
அறவே ஒழிப்பாய் அறிந்து! - செறிவுடன்
நல்லதையே எண்ணி நலமாக வாழ்ந்தாலே
இல்வாழ்க்கை இன்பாகும் இன்று!
- வ.க.கன்னியப்பன்