அஞ்சுதல் - அஞ்சாமை பற்றுதல் - பற்றாமை நம்புதல் - நம்பாமை

கலித்தாழிசை பா
அச்சமும் வேண்டும் அதனூடே அஞ்சாமையும் வேண்டும்
சச்சரவில் சுற்றங்கள் இருக்கையில் கெட்டச்சொற்கள் பேசும்போது
அச்சமும் வேண்டும் மிகச்சிறந்த கவனமும் வேண்டும்
கொச்சையாய் பேசியபடி எதிரிகள் வருகையில் அஞ்சாமையும் வேண்டும்.
பற்றுதலும் வேண்டும் எப்போதும் பற்றில்லாமையும் வேண்டும்
உற்றுபார்க்கையில் உதவுவதற்கு உகந்தோர் அருகினில் இருக்கையில்
பற்றுதலோடு அவர்களிடம் பரிவுடன் இருப்பது நற்பண்பாம்
அற்பக் காரணத்திற்கு அகத்தின் தலைவியும் பேசும்போது பற்றற்றநிலை நன்றேயாம்.
நம்புதலும் வேண்டும் எப்போதும் நம்பாமையும் வேண்டும்
நம்மினத்தின் பழைமையான பழக்கங்களை நம்புதல் வேண்டும்
நம்பாமையே வேண்டும் அதினினுள் தவறென தோன்றுதலை
மும்மொழித் தமிழின் ஆதியின் தோற்றத்தை போற்றுதலே கடமையாம்.
-----நன்னாடன்