மனிதனே ஓடுவது எங்கே
மனிதர்களே ....
கூட்டம் கூட்டமாக
மருந்து வாங்கவும்
சுவாசக் காற்றை
விலைக்கு வாங்கவும்
அங்கும் இங்கும்
ஓடுவது எங்கே ..!!
சற்று நில்லுங்கள் ...
பொறுமையாக
உங்கள் மனச்சாட்சி
சொல்வதை கேளுங்கள் ..!!
கிருமி நோய்கள்
நாட்டில் வருவதும்
போவதும் புதிதல்ல
எப்போதும் இருப்பதுதான்
முன்னோர்கள்
சொன்னதெல்லாம்
மூடத்தனம் என்று சொல்லி
உன்னையே நீ
அழித்துக் கொண்டாய் ..!!
காலம் இன்னும்
கைமீறி போகவில்லை
முன்னோர்கள் சொன்ன
உண்மையை ஏற்றுக்
கொள்ள மறுக்காதே
இயற்கையை அழித்தோம்
இறைவன்
படைப்பினை பழித்தோம்
அறிந்தும் அறியாமல்
அறிவை மறந்து
ஆயிரம் தவறுகளை செய்து
பூமி தாயின் மடியை
சுமைதாங்கி ஆக்கினோம்...!!
மரங்கள் மூலம் இயற்கை தந்த
சுவாச காற்றை
வளர்ச்சி என்ற பெயரில்
மரங்களை வெட்டி சாய்த்து
கருணையின்றி
இயற்கை அன்னையை
கொலை செய்தோம் ..!!
இன்று சுவாசிக்க
மாசில்லா காற்றின்றி
நோய்நொடி நம்மை தாக்க
தவிக்கின்றோம்...!!
இயற்கை கொடுக்கும்
சுவாசக் காற்றை
இயற்கை முறையில்
சுவாசிக்க முடியாமல்
செயற்கை முறையில்
சுவாசிக்க
காற்று கிடைக்காமல்
தவிக்கின்றோம் ...!!
முற்பகல் செய்யின்
பிற்பகல் தானே விளையும்
என்பதை உணர்வோம்
இயற்கை வளத்தை
பாதுகாப்போம்
வருங்கால
மனித குலத்தை
நோய்நொடியின்றி
காத்து மகிழ்வோம் ...!!
--கோவை சுபா