இயற்கையின் துப்புரவு
கட கடவென
இடி இடிக்க
தட தடவென
மழை பொழிய
தூசிகள் நீங்கி
பளபளவென
இலை மிளிர
சலசலவென
வெள்ளம் ஓட
வெள்ளத்தில்
அழுக்குகள்
கரைந்து போக
இயற்கை
துப்புரவு பணியாற்றுகிறதே!
இங்கே
மனித மனம் மட்டுமே
அழுக்குகளோடு.....
ஜோதி மோகன்
புதூர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
