செந்தாமரையால் பேறுபெற்றது சேறு என்பான் கவிஞன்
சேறு வதிதேங் கியதண்ணீர் குட்டையென்பார்
நாறும் கால்வைத் தால்நன்றோ என்றிடுவார்
கூறும்பற் பலஊர் மலர்ந்திடும்செந் தாமரையால்
பேறு பெற்றது சேறுஅறிஎன் பான்கவிஞன்
----ஒரே எதுகை இயல்புப்பா
சேறு வதிதேங்கும் தண்ணீர்குட் டையென்பார்
நாறும்நீ கால்வைத் திடின்நன்றோ என்றிடுவார்
கூறுவர்கூ சாமல் மலர்ந்திடும்செந் தாமரையால்
பேறுசேறுக் கென்பான் கவி !
சேறு வதிதேங்கும் தண்ணீர்குட் டையென்பார்
நாறும்நீ கால்வைத்தா லென்றிடுவார்- கூறுவூரே
கூறுநீகூ சாமல் மலர்ந்திடும்செந் தாமரையால்
பேறுசேறுக் கென்பான் கவி !
----இப்போது முறையே ஒ வி இன்னிசை நேரிசை வெண்பா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
