கண்திறந்து பார்த்தாள் கனிவுடன் என்னை - ஓரொலி வெண்டுறை

ஓரொலி வெண்டுறை

கண்களின் வார்த்தை காதலிக்குப் புரியாதோ எனவருந்தி நானிருந்தேன்;
கண்ணே நீயெனக்குக் கற்கண்டே என்றேன்!
கண்திறந்து பார்த்தாள் கனிவுடன் என்னை!

– வ.க.கன்னியப்பன்

வெண்டுறை

வெண்டுறை (வெண்பாத் துறை) என்னும் நாற்பாப் பாவின வகையை யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் யாப்பியல் இலக்கண நூல்கள் வகைப்படுத்திக் காட்டுகின்றன. [1]

மூன்றடி முதல் ஏழடி வரை அடிகள் கொண்ட பாடலாக இருக்கும்.

முதலில் வரும் அடியின் சீர் எண்ணிக்கை பின் வரும் அடிகளில் குறைந்திருக்கும்.

முதலில் வரும் சில அடிகள் ஓர் ஓசை அமைப்பிலும் பின்னர் வரும் அடிகள் வேறு ஓர் ஓசை அமைப்பிலும் வந்தால் அது வேற்றொலி வெண்டுறை எனப்படும்.

எல்லா அடியும் ஒரே மாதிரியான ஓசை அமைப்பில் வந்தால் அது ஓரொலி வெண்டுறை எனப்படும்.

(வெண்[பா] + துறை = வெண்டுறை)

எடுத்துக்காட்டுப் பாடல்

தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம்
ஆளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோல் சாய்ந்துவிழும் பிளிற்றி ஆங்கே.

மூன்றடியாய், முதலடியை விடப் பின்னிரண்டடிகளும் இருசீர் குறைந்து வருவதால் இது வெண்டுறையாகும். பாடல் முழுதும் ஒரே ஓசையமைப்பில் (ஒரே மாதிரிச் சீர்கள்) உள்ளமையால் இது ஓரொலி வெண்டுறை.

விக்கிப்பீடியாவில் இருந்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-21, 12:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

மேலே