நீ இருந்தால்....

👑👑👑👑👑👑👑👑👑👑👑

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

👑👑👑👑👑👑👑👑👑👑👑


" ஒருவன் மட்டும்
நல்லவனாக இருந்து
என்ன செய்ய முடியும் "என்று
கேட்பவர்களின்
எண்ணிக்கை
நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே
போகிறது ......!

உலக மக்கள் தொகை
எழுனூற்று ஐம்பது கோடியைத் தாண்டி விட்டது....
இவ்வளவு மக்களும்
ஒரு பெண்ணிலிருந்து
ஒரு ஆணியிலிருந்துதான் உருவானார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது......!


ஒரு காந்தியடிகள் தான்
இந்தியா
சுதந்திரம் பெறுவதற்கு
முக்கிய காரணமாக
இருந்தார் என்பதை
யாராவது மறுக்க முடியுமா ?

ஒரு காமராஜரால்தான்
கல்வியால் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது
இதை யாராவது
எதிர்க்க முடியுமா ?

ஒர் எடிசனால்தான்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை
கண்டுபிடிக்க முடிந்தது
இதை யாராவது
இல்லை என்று சொல்ல முடியுமா ?

திருவள்ளுவர்
ஒருவரால் தான்
உலகமே ஏற்றுக்கொண்ட திருக்குறளை இயற்றமுடிந்தது
இதை யாராவது பொய் என்று சொல்ல முடியுமா...?

அதிகச் சக்தி வாய்ந்தது
அணுகுண்டு என்றாலும்
அதை உருவாக்கியது
ஒரு மனிதசக்தி தான் அல்லவா!

ஆயிரம் மனிதர்களின்
சக்திபெற்ற
யானையைக் கூட
வழிநடத்துவது
ஒரு மனிதன் தான் அல்லவா!

ஒரு வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை
எதிர்த்தப் பிறகுதான்
ஒவ்வொரு இந்தியனும்
எதிர்க்க முன்வந்தான்.....
நாம் ஒருவன் மட்டும்
ஆங்கிலேயரை எதிர்த்து
என்ன செய்ய முடியும் ?என்று எண்ணியிருந்தால்
இந்தியா சுதந்திரம்
அடைந்திருக்குமா?

இனியாவது
நல்லவர்களை
கேலி செய்வதை
விட்டு விட்டு
நல்லவனாக மாற
முயற்சி எடு ....
நீ நல்லவனாக இருந்தால்
அதை நினைத்து
பெருமைப்படு...!

*கவிதை ரசிகன்*

👑👑👑👑👑👑👑👑👑👑👑

எழுதியவர் : கவிதை ரசிகன் (21-May-21, 7:51 pm)
Tanglish : nee irundaal
பார்வை : 84

மேலே