காதலே காதலே

போகும் பாதையெல்லாம் பூக்கள் விதைத்து சென்றவனே!
பூன்னகை பூக்களை பூஞ்சோலையாய் மாற்றி சென்றவனே!
கனவில் வந்து என்னை கடத்தி செல்பவனே!
கானல் நீராய் கண்ணில் நிறைந்து நிற்பவனே!
கவிதை வடிவில் என் எழுத்தில் வந்து நிற்பவனே!
காணும் காட்சி எல்லாம் உன் நிழல் தெரியுதடா!
பூக்கும் பூவெல்லாம் உன் பெயரை சொல்லி பூக்குதடா!
வண்ண பொட்டுக்கு வர்ணம் தருகிராயடா!
எண்ணவோ என்னை எண்ண வைக்கிறாயடா!
பார்வை தனை வீசி என்னை பதை பதைக்க வைக்கிறாயடா!
புது மொழியில் காதல் சொல்லி என்னை மெய் சிலிர்க்க வைய்யடா!

எழுதியவர் : சுதாவி (23-May-21, 6:42 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : kaathale kaathale
பார்வை : 282

மேலே