நீ சிரிக்கும் அழகில் பூக்களும் மலர்கிறது 555

***நீ சிரிக்கும் அழகில் பூக்களும் மலர்கிறது 555 ***


ப்ரியமானவளே...


உறக்கத்தில் கனவில் வந்தாய்
கனவு கலைந்தது என்றேன்...

கனவில் மட்டுமல்ல...

உன்னை உறங்க விடாமலும்
வந்து செல்வேன் என்கிறாய்...

நீ நடந்தால்
புள்ளி மான்...

உன் கண்ணழகில் ஒளிந்திருக்கும்
கற்பனைகள் ஆயிரம்...

நீ சிரிக்கும் அழகில்
பூக்களும் மலர்கிறது...

உன் கனவில் பிறக்கும்
ஒவ்வொரு குழந்தைக்கும்...

கவிதை என்று
பெயர் வைத்தேன்...

என்னை நீ கடந்து
செல்லும் நேரத்தில்...

சப்தமிடும் உன் கொலுசின்
ஓசைகள் நித்தம் தேவை...

நாடெங்கும் ஊரடங்கு உன்னையே
தினம் தேடுது என் மனக்குரங்கு...

என் உணர்விற்கு உயிர் சேர்க்கவா
என் உயிரின் உயிரே.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (23-May-21, 5:25 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1170

சிறந்த கவிதைகள்

மேலே