பாடகி ஜெனி அவர்களுக்கு வாழ்த்துக் கவி

உன் குரல்
குரல் அல்ல
வள்ளுவன்
எழுத மறந்த
திருக்குறள்

காற்றை இசை ஆக்குகிறது
உன் தொண்டை
என்னவென்று போற்றுவது
தமிழுக்கு தமிழுக்கு
நீ ஆற்றும் இசை தொண்டை

உன் முன் குயிலும் கா கா
என்றே கரைகிறது
உன் குரல் கேட்டால்
கல் நெஞ்சுமல்லவா கரைகிறது

நீ இம்சையை கூட
இசை ஆக்குபவள்
பாட்டை கூட
பட்டு ஆக்குபவள்

ஜெனி
உன் பாடல்
அனைத்தும் கனி
உன் பாடல்
கண்டு விலகுவது சனி

உன் பாடல்
கோடை காலத்து பனி
உன் பாடல்
கேட்டால் நீங்குகிறது
கொரோனா என்னும் பிணி

உன் பாடல்
கேட்டால்தெரிவதில்லை மணி
உன் பாடல் தான்
ஆகப்போகிறது இந்தியாவின் தேசியகீதம் இனி

நீ சரஸ்வதி கையில்
இருக்கும் வீணை
நீ இசைக்கும் போதெல்லாம் வானவில் தோன்றி
அழகாகிறது வானை

உன் குரல் கேட்டு பூக்களெல்லாம் சிந்துகிறது தேனை
உன் அம்மானைக்கு
மயங்கி புலி கூட கொல்லாமல்
விட்டு விடுகிறது மானை

நீ சங்கீதம்
இசைக்க பிறந்த சங்கீதா
நீ கீதம் இசைப்பது தான்
எங்களுக்கு கீதை

சீதை நாயகி ராமகாதை
உன் இசைத் தேன்
வழிந்தோட தருகிறோம்
எங்கள் காதை

எழுதியவர் : குமார் (23-May-21, 11:03 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 63

மேலே