தனியாள்

எங்கு நோக்கிலும் ஆண் பெண் பாலின கவர்ச்சி வயப்பட்டு புணர்ச்சிக்கு தயாராகும் ஜோடிகள்!
சுற்றி சுற்றி அதிலேயே வட்டமடிக்கும் கேடிகள்!
கேட்பதெல்லாம் இரட்டை அர்த்தமுள்ள ஆபாச வார்த்தைகள்!
விதைத்ததே வளரும் என்பார் போல் கேட்டதே வாயிலுதிக்க கூவிடும் சேவல், கோழிகள்!

இணையம் வரமுடியவில்லை.
வந்தாலே கண் முன்னே நிற்பதெல்லாம் கன்றாவியான காட்சிகளே!
கேட்டால் கணவன் மனைவி என்பார்கள்!
உன் மனைவியை நீ செய்வதை நாங்கள் ஏன்டா பார்க்க வேண்டும்?
மாவை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டு சினிமாவின் கலாச்சாரம் தான் பழக்கிக் கொண்டார்கள் இணையமெங்கும்.

சரி, நாமாவது பயனுள்ள வழியில் இணையத்தை பயன்படுத்தலாம் என்று பார்த்தால் அங்கு வந்து நிற்கிறது மிகவும் கவர்ச்சியான காணொளிகளை காண நீங்கள் இந்த பயன்பாட்டை பயன்படுத்துங்கள்! நான் வீடியோ பதிவேற்றுகிறேன்! நீயும் உன் கவர்ச்சியான வீடியோக்களை பதிவேற்று! என்று.
ஏன்டா டேய்! நீ தான் மலத்தை திங்கிறாய் என்றால் நாங்கள் ஏன்டா திங்க வேண்டும்?

இது தான் நாகரிகம் என்று வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரும் சீமான், சீமாட்டிகளே! நாயும் நடுத்தெருவில் தான் இன்னொரு நாயை புணரும் உங்கள் நாகரிகம் போல!
நாங்களெல்லாம் மனிதர்கள் என்பதால் இந்த நாய் கலாச்சாரம் எங்களுக்கு தேவையில்லை.
பொறுமை இழந்த போதே புத்தியை இழந்துவிட்டீர்கள் என்பது மருப்பில்லாத உண்மை.

இவனொரு தனியாள்! பொறாமையில் புலம்புகிறான் என்று விளையாட்டாய் நினையாதீர்கள்.
கோரோனாவில் இருந்து மீள இந்த தனியாள் வாழ்க்கை தான் உங்களுக்கு தேவை.
புரியாதவர்களே! பகுத்தறிவு விழிக்கப்படாதவிற்களே!
உங்களை போல் எல்லாரையும் மாற்றத் துடிக்கும் கொரோனா நச்சு வைரஸ்களே!
தானும் வீழ்ந்து பிறரையும் வீழ்த்தி பூச்சாண்டி காட்டும் பித்துக்குழிகளே!

இந்த தனியாள் வீழ்வான் என்று எண்ணி மனப்பால் குடிக்காதீர்கள்.
கூட்டங்கள் உங்களை கொண்டாடும்.
உங்களுக்காக முகத்துதி பாடும். எல்லாம் முடியும் நேரம் எதுவும் இருக்காது.
எல்லாம் சுயநல சூத்திரதாரிகள்!
எப்போது காலை
வாரிவிடுவார்கள்?
எப்போது முதுகில் குத்துவார்கள்?
எப்போது தன் நச்சுப்பற்களை காட்டி கடிப்பார்கள்? யாரு தான் அறிவார்?

இறுதிவரை யார் யார் கூடவோ?
கூடும் நேரம் கூட இருந்து பார்த்தவர் யார்?
ஜோடிகள் இடமாறும்.
பொருள் பொல் நினைத்து விலைகூறி சந்தைப் படுத்தலாம். வாடகைக்கு இதயம் கிடைக்கலாம்.
கார், பங்களா, என்று வசதியோடு இருந்தால் உறவுக்கு ஆயிரம் உன்னை சுற்றி வரும்.
எதுமில்லா ஏழை என்றால் பேச்சு துணைக்கு கூட ஏதுமில்லை.
இப்போதும் எப்போதும் சொல்கிறேன், தனிமை எனக்கு பழக்கப்பட்ட ஒன்று.
அங்கும் கல்லெறிந்து அமைதியை கலைக்கும் உங்களை கோரோனாவே கொண்டு போகட்டும்!

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (24-May-21, 5:28 am)
பார்வை : 1687

மேலே