மலரும் மனிதனும்

இயற்கையின் படைப்பில்
வெவ்வேறு தோட்டத்தில்
விளைந்து
பூத்துக்குலுங்கும் மலர்கள் ...!!

வண்ணங்களில்
மாறுவதில்லை
அள்ளிக் கொடுக்கும்
வாசனைகளிலும்
வேறுபடுவதில்லை ....!!

ஆனால்..
இறைவனால்
படைக்கப்பட்ட மனிதன்
மாறுபட்ட குணங்களோடு
ஜாதி மத வேறுபாடு கொண்டு

மனித பண்புகளை மறந்து
வேற்றுமை சிந்தனையுடன்
ஒற்றுமையின்றி வாழ்கின்றான்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-May-21, 8:44 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 163

மேலே