கி ரா எனும் கதவு

பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியது
மழைக்காக மட்டும் என்று
ஏழாம் வகுப்பு வரை
மட்டுமே படித்தவன்.....
அப்போது மழையை
மட்டும் ரசித்தவன்

ஆகவே எப்போதும்
சலைக்காமலும்
மலைக்காமலும்
பெரும் மழையாய்
எழுத்தெனும்
மலை கொடுத்தவன்...

படித்தத்தினால்
அறிவு பெற்றோர்
ஆயிரம் உண்டு....

பாடம் படிக்காத
மேதைகளும்
பாரினில் உண்டு
என்று நிரூபித்தவன்....

கரிசல் எழுத்தாளன் என
பெயர் பெற்றவன்....

சாகித்திய பரிசு
பெற்று சாதித்தவன்....

புதுவையில் நல்ல தமிழ்
புகுத்தியவன்....

தமிழகத்தில் இருந்து
எழுத்து விருந்து
படைத்தவன்....
புதுவையில் சென்று
தன் பெயரிலேயே
விருது படைத்தவன்....


கதவின் சத்தத்தில்
குழந்தைகள்
தூங்கினார்கள்.....
அந்த கதவை
எடுத்து சென்ற பின்
பிள்ளைகள் எப்படி
ஏங்கினார்கள்...
என்பதை....
கதை மூலம்
சொன்னவன்.....

வலி கஷ்டம்
என்றால் என்ன
என்பதை உலக
அரங்கத்திற்கு
கிடை எனும் கதை மூலம்
காட்சிப்படுத்திய
எழுத்துக்கடவுள் அவன்.....

உணர்வென்றால்
என்ன என கதவு
என்ற கதை மூலம்
கத்துக் கொடுத்த
ஆசான் அவன்....

கதவு
அவனுக்கு
மட்டுமே சொந்தம்
அவன் பெயர் ...
கி.ரா..எனும்
கி.ராஜநாராயணன்...

கதைவை திற
காற்று வரட்டும் என்று
எத்தனையோ பேர்
எழுதினாலும்....

அதற்கு முன்பே
கதவை திறந்து விட்டான்
கதவு எனும் கதை எழுதி

எழுதிப் பாருங்கள்
காற்று வரும் என்று
மனக்கதவை
திறந்து வைத்தான்
எழுத்து எனும்
திறவு கோலால்......


கி.ரா எனும் "கதவு"
அது கீராத கதவு
அது இலக்கிய
வீட்டை எப்பொழுதும்
அலங்கரிக்கும் கதவு
கரிசல் காவியங்களுக்கு
கதவு திறந்துவிட்ட கதவு....

எழுதியவர் : மேஜர் முருகன் (24-May-21, 11:13 am)
சேர்த்தது : Major Murugan
பார்வை : 37

மேலே