திருந்துகே தீச்சரத் திருந்தயெம் பெருமானே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா கூவிளம் விளம் விளம் விளம் காய்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் அருகி வரலாம்)
பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் திருந்தயெம் பெருமானே. 9
- 107 திருக்கேதீச்சுரம், இரண்டாம் திருமுறை, திருஞான சம்பந்தர் தேவாரம்
விருத்தம் எழுத முனைவோர் சீர் ஒழுங்கை ஒவ்வோர் அடியிலும் பின்பற்ற வேண்டும்.