புதுமை பெண்ணே!

🔴🟠🟡🟢🔵🟣⚫🔴🟠🟡🟡

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🟠🔴⚫🔴🟠🟡🟢🔵🟣⚫🟠

என் மகளை
டாக்டர் ஆக்குவேன்
வக்கீல் ஆக்குவேன் என்று வாய்கிழிய சொல்வாரடி
புதுமைப் பெண்ணே...!
நீ வயதுக்கு வந்தவுடன்
படித்தது போதும் என்று
உனக்கு மணமுடித்து
வைப்பாரடி புதுமைப் பெண்ணே!
இனியாவது
இப்பழக்கத்தை மாற்றவேண்டுமடி....

எனக்கு மகனை விட
மகள் ரொம்பப் பிடிக்கும் என்று
வாய் நிறைய
சொல்வாரடி புதுமைப் பெண்ணே ....!
ஆனால்
மகனை ஆங்கிலப் பள்ளியிலும் மகளை அரசுப் பள்ளியிலும் சேர்ப்பாரடி புதுமை பெண்ணே..!
இனியாவது
இவர்கள் மனம் மாறுவற்கு
வழி ஒன்று செய்வோமடி....

ஆணுக்குப் பெண் சமமெனறு
மேடை தோறும் கைத்தட்டி
புகழ்வாரடி புதுமை பெண்ணே!
ஆண் குழந்தை இல்லையென்று
அடுக்கடுக்காய்
பெண் குழந்தையைப் பெற்றெடுப்பாரடி புதுமை பெண்ணே!
போலி வார்த்தைகளுக்கு மயங்காமல்
பல புரட்சிகள் செய்வோமடி.....

புத்தகத்தின் உள்ளே
பெண்கள் நாட்டின் கண்கள் 'என்ற தலைப்பில் கட்டுரை
எழுதுவார்களடி புதுமைப் பெண்ணே !
ஆனால்
புத்தகத்தின் மேல் அட்டையில் பெண்ணை
ஆபாசமாக அச்சிட்டிருப்பாரடி
புதுமை பெண்ணே!
தென்றலாய் வீசியது போதுமடி
இனி புயலாய் வீச வேண்டுமடி..

உன்னை 'தெய்வம்' என்றும்
'கண்கள்' என்றும் புகழ்வாரடி புதுமைப் பெண்ணே !
காரணம் .....
'தெய்வம் 'என்று
சொன்னால் தானே
அறைக்குள் வைத்துப்
பூட்ட முடியும்...
'கண்ணே 'என்று
சொன்னால்தானே
கண்ணாடி அணிவித்து
உண்மையை உணர முடியாமல்
செய்ய முடியும்....
அலங்கார வார்த்தகைளுக்கு
அடிமையாகமல்
'பெண்' என்பதிலேயே
பெருமை கொள்ளடி
புதுமை பெண்ணே....!


*கவிதை ரசிகன்*

🔴🟠🟡🟢🔵🔵🟣⚫⚫🟢🟡

எழுதியவர் : கவிதை ரசிகன் (25-May-21, 7:34 pm)
பார்வை : 67

மேலே