மின்விசிறி
நாள்தோறும் சுற்றும் நல்லவனே
நந்தவனக் காற்று தருபவனே
முகத்தை மட்டும் உடையவனே
மூன்று கை கொண்ட முதியவனே
உழைக்கும் மக்களின் உற்றவனே
உறங்கும் மக்களின் உறவினனே
அகிலத்தை அடக்கி ஆள்பவனே
அண்ணாந்து பார்க்க வைப்பவனே
வியர்வையை தேடி உண்பவனே
விஞ்ஞான உலகின் நாயகனே
ஆயினும்,
என்ன பாவம் செய்தாயோ?
தலைகீழாக தொங்குகிறாய்