அவள் சூடிய ரோஜா

ரோஜாவை வார்த்தைகளில்
ரசிப்பவன் கவிஞன்
ரோஜாவை வண்ணக்கோடுகளில்
ரசிப்பவன் ஓவியன்
ரோஜாவைக் கசக்கிப் பிழிந்து
அத்தர் ஆக்குபவன் வணிகன்
முள் சிறையில் அடைபட்ட ரோஜாவை
விடுதலைசெய்து காதோரத்தில் சூடியவள்தான்
ரோஜாவின் உண்மையான ரசிகை !

எழுதியவர் : கவின் சாரலன் (26-May-21, 9:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : aval soodiya roja
பார்வை : 80

மேலே