ஓம் நமசிவாய

"அண்ணாமலை இறை உன்னை,
எண்ணாமல் தான் இருந்தேனோ?

உண்ணாமுலை நாதனை ,
உண்ணும் போது மறந்தேனோ ?


பொன்னார் மேனியனை,
பொழுதெல்லாம் துறந்தேனோ ?

கண்ணப்ப நாயகனை,
கனவிலும் பிரிந்தேனோ?


எந்நாட்டவர்க்கும் தலைவனை
பின்னால் காண்போம் என இருந்தேனோ ?

இந்நாள் வரை செய்த பாவம்தனை,
எந்நாள் சென்று கரைப்பேனோ?


நன்னாள் அந்நாள் பொன்னாளோ?

கண்ணால் உனை காண
இன்று முன்னால் நகரா விட்டாலும்,


ஒருநாள் நின் பாதம் சரணடைய
தன்னால் விரைவேனோ?
சொன்னாலே இனிக்கும் உன் நாமம்தனை,

பாவ புண்ணான நாவினால் உரத்த
உரைப்பேனோ?
தீர்ந்தது கவலை என உன் திருவடியில்
இணைவேனோ?."
-----

எழுதியவர் : (26-May-21, 3:32 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 260

மேலே