செந்தமிழ்செல்வி💥
செந்தமிழ்செல்வி💥
விழுப்புரம் தாண்டி " ராக்போர்ட் எகஸ்பரஸ்" மிக வேகமாக ஓடிகொண்டிருக்க, விளக்குகள் முழுவதுமாக அனைக்கபடவில்லை. டி.டி.ஆர் அவர் பணியை முடித்துவிட்டு அவர் இடத்துக்கு சென்று உட்கார்ந்து கண் அயர்ந்தார். இடது அப்பர் பர்த்தில் படுத்திருந்த செந்தமிழ் செல்விக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு , புரண்டு படுத்தாள், உறக்கம் வந்தபாடிலில்லை.
அவள் எதிர் பர்த்தில் முப்பது வயது மதிக்க தக்க ஒரு இந்திகாரன் படுத்துயிருந்தான். அவனுக்கு கிழே ஒரு நாற்பது வயதுயுடைய பெண்மனி அயர்ந்து அண்ணாந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். லோயர் பர்தில் அந்த பெண்மனி கணவனாகத்தான் இருக்க வேண்டும் ,அவரும் ஒருகளித்து நல்ல தூக்கத்தில் இருந்தார். இவள் பர்த்துக்கு கிழே ஒரு இளைஞன். தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பது செந்தமிழ் செல்வியின் யூகம். அந்த இளைஞனுக்கு கிழே லோயர் பர்தில் ஒரு வயதான பாட்டி, அவ்வப்போது இருமலுடன் உறங்க முயற்ச்சி செய்தார். வண்டி வேகமாக ஓடி கொண்டிருக்க , செந்தமிழ் செல்வியின் பார்வை இந்திகாரன் மீது விழுந்தது. இந்திகாரன் குப்புறபடுத்து, தன் வலது கையை பயன்படுத்தி , அவனுக்கு கிழே மிடில் பர்த்தில் படுத்து அயர்ந்து உறங்கும் நடுத்தர வயது பெண்மனி முந்தானையை விலக்க முயற்ச்சி செய்தான். இந்திக்காரன் எல்லோரும் நல்ல உறக்கத்தில் உள்ளதாக நினைத்து அந்த கிழ்தரமான செயலில் ஈடுபட்டான். செந்தமிழ் செல்வி இந்திகாரன் செய்கையை பார்த்து, அதிர்ச்சி அடைந்தாள். இந்திகாரன் இப்போது அந்த நடுத்தர வயது பெண்மனியின் முந்தானையை முற்றிலும் விலக்கி, அவள் ஜாக்கெட்டு ஊக்குகளை தேடினான். பாவம் அந்த
பெண்மனி நல்ல தூக்கத்தில் இருந்தாள்.
இந்திக்காரன் அவன் கிழ்தரமான செயலில் மும்முரமாக செயல்பட்டான்.
இதற்கு மேல் செந்தமிழ் செல்வியால் தன் கோபத்தை கட்டுபடுத்த இயலவில்லை. ஒரு கையால் லைட் சுவிட்சை போட்ட செந்தமிழ்செல்வி, தன் பர்த்தில் இருந்த வாரே, தன் கால்களால் இந்திகாரனை ஒரு எத்து எத்தினாள். மீண்டும் ஒரு முறை அவனை தன் கால்களால் ஒரு உதை உதைத்தாள். இப்போது செந்தமிழ் செல்வி பர்த்தில் இருந்து கிழே இறங்கியவள், இந்திக்காரன் சட்டை காலரை பிடித்து , " ராஸ்கல் கிழ இறங்குடா" என்று உறக்க கத்தினாள்.
ஏறகுறைய அனைவரும் உறக்கத்தில் இருந்து விழித்து கொண்டார்கள்.
திருடனுக்கு தேள் கொட்டியன் போல் ஒன்றும் தெரியாத பச்சை பிள்ளை போல் இந்திகாரன் கிழே இறங்கி நின்றிருந்தான். மீண்டும் லெப்ட் , ரைட் என்று மாறி, மாறி இந்திக்காரன் கன்னத்தில் அறைவிட்டாள் செந்தமிழ் செல்வி. பரபரப்பு அந்த பெட்டி முழுவதும் தொற்றி கொள்ள, டிடிஆர் அங்கே வந்தார். " என்னாச்சு" என்று செந்தமிழ் செல்வியை பார்த்து கேட்டார்.
" இம், இந்த இந்திக்கார நாய கேளுங்க" என்று மிக கோபமாக சொன்னாள்.
" அடிக்கர அளவுக்கு என்ன குற்றம் செய்தான்"
" தோ, இந்த பெண்மனியோட, முந்தானையை.." என்று சொன்னவள் மீண்டும் ஒரு அறை இந்திக்காரன் கன்னத்தில் கொடுத்தாள்.
ஆர்.பி.எப்( ரயில்வே போலீஸ்) அங்கே வந்தார். டிடிஆர் நடந்ததை விளக்கினார்.
விருதாச்சலம் ஜங்ஷன் வந்தது. இரயில் நின்றது. இரயில்வே போலீஸ் இந்திக்காரனை தரதர வென இழுத்து சென்றார். டிடிஆர், செந்தமிழ்செல்வி உடன் சென்றனர். " உங்க தைரியத்தை பாராட்ரேன், நமக்கு ஏன் வம்புன்னு இல்லாம, ஒரு தவறான செயல் நடக்காம செய்ததுக்கு என் பாராட்டுக்கள், இருந்தாலும், இந்தி பையன்
" செக்ஸுவல் அபி யூஸ்" கேஸ்ல புக் பண்ணா, அவன் ஃப்யூச்சர் டோடல்லா ஸ்பாயில் ஆயிடும், அதான், "டிரங்கன் டிராவலிங்" கேஸ்ல இவன புக் பண்ணா, பைன் கட்ட சொல்லுவாங்க, என்ன செய்யலாம் சொல்லுமா" டிடிஆர் கேட்டார்.
" இனிமே வாழ்நாள்ள இது மாதிரி தவறா செய்யக்கூடாதுன்னு ஆர்.பி.எப் மூலமா ஒரு தட்டு தட்டி, நீங்க சொன்ன மாதிரியே, டிரங்கண் டிரைவிங் கேஸ்ல புக் பண்ண சொல்லுங்க" செந்தமிழ் செல்வி பதில் சொன்னாள்.
ஆர்.பி.எப் இந்திகாரனை அழைத்து சென்றவுடன், டிடிஆரும், செந்தமிழ் செல்வியும் மீண்டும் ட்ரெயினில் ஏறினார்கள். " உங்கள மொத்தல்ல ஆம்பள அப்படித்தான் நனைத்தேன், அப்புறம் உங்கள் குரல் கேட்டு"
" பொண்ணுன்னு தீர்மானிச்சீங்களா"
" ஆமாம்மா"
" ஒரு வயசுக்கு அப்புறம் நான் இப்படி தான் சார், பாய் ஹேர் கட், ட- ஷர்ட், ஜீன்ஸ், ஷூஸ், எப்பயும் மேல்( male) அப்பியரன்ஸ்ல தான் இருப்பேன்"
" உங்க தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்"
" தேங்ஸ் சார்"
ஸ்ரீரங்கம் தாண்டி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் பறந்து கொண்டிருக்க, தன் பர்த்துக்கு ஏற முயற்றவளை மறித்து, அந்த நடுத்தர வயது பெண்மனியும், அவளுடைய கணவனும் செந்தமிழ் செல்விக்கு நன்றி சொன்னார்கள். இன்னும் அரைமணி நேரத்தில் வண்டி திருச்சி அடைய இருப்பதால், அனைவரும் பர்த்திலிருந்து கீழே இறங்கி அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் வந்தது. வண்டி நின்றது. செந்தமிழ் செல்வி, தன் சக்கரம் கொண்ட பெட்டியை நகர்த்திய வண்ணம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் நடந்த வண்ணம்
இருந்தாள். " மேடம், மேடம்"
குரல் கேட்டு திரும்பிய செந்தமிழ் செல்வி,
" அட நீங்களா" என்றாள்.
ட்ரெயினில் செந்தமிழ்ச்செல்வி கீழே மிடில் பர்த்தில் பயணம் செய்த தமிழ் இளைஞன்.
" என்னமா, டீல் பண்ணிங்க"
" என் கண் முன்னாடி தப்பு நடந்துச்சு, அதனால தான்"
" அப்பா, இந்திகாரன் வாழ்நாள்ள இனிமே அப்படி ஒரு தப்பு பண்ணவே மாட்டான்"
" என்ன கேட்டா, அவனுக்கு நான் கொடுத்த அடி கம்மி, எவ்வளவு தைரியம் இருந்தா, அந்த மாதிரி ஒரு காரியத்துல இடுபட்டிருப்பான், இவன எல்லாம்..."
" ஐ லைக் யுவர் கரேஜ்"
" தேங்க்ஸ்"
" பை த பை மை நேம் இஸ் சுரேஷ்"
" ஐ அம் தமிழ்ச்செல்வி"
" உங்க நேட்டிவ் திருச்சியா"
" இல்ல சென்னை தான் நேட்டிவ்"
" சுரேஷ் உங்க ஊர் இதுதானா"
" இல்ல எனக்கும் சென்னைதான் நேட்டிவ்"
" அப்ப, இங்க..."
" ஒரு ஷார்ட் ஃபிலிம் டிஸ்கஷன் அப்படியே ஷூட்டிங் , நீங்க..."
" ஃப்ரெண்டோட கல்யாணம்"
" எங்க ஸ்டே பண்ண போறீங்க"
" இனிமேதான் தேடணும்"
" யூ don't மைன், நான் தங்கப் போற லாட்ஜிலே நீங்களும் தங்களாமே"
" உங்களுக்கு ஏன் சிரமம்"
" இதுல ஒன்னும் சிரமம் இல்ல"
" விடமாட்டீங்க போல இருக்குது, ஓ.கே"
ஆட்டொவில் ஏறிய இருவரும்
" உங்க புரோபஷன் ஷார்ட் பிலிம் எடுக்கிறதா"
" இல்ல நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர், ஷார்ட் பிலிம் ஒரு ஹாபியா நாங்க மூணு ஃப்ரெண்ட்ஸ் ஆரம்பிச்சிருக்கோம்"
" கங்கிராட்ஸ்"
" நீ என்ன பண்றீங்க"
" பேசிக்கா, நான் ஜர்னலிஸ்ட். ரொம்ப போர் அடிக்கவே, ஒரு சேஞ்சுக்கு, லாஸ்ட் ஒன் இயரா, ஒரு இன்டர்நேஷனல் கம்பெனிக்கு சின்ன பசங்க விளையாடுற கேம்ஸ் ஆப்ஸ் எழுதறேன்"
" ஓ எக்ஸலண்ட்"
"போர்ட் வியூ" லாட்ஜ் வந்தவுடன் செந்தமிழ்ச்செல்வியும் சுரேஷூம் ஆட்டோவிலிருந்து இறங்கி லாட்ஜில் நுழைந்தார்கள்.
" எப்படி இருக்கு ரூம்"
" பெண்டாஸ்டிக்"
" நீங்க முதல்ல ப்ரஸ் ஆயிடுங்க, ஏன்னா நீங்க கல்யாணத்துக்குப் போகணும் இல்ல"
" யு ஆர் ரைட், எங்க உங்க பிரெண்ட்ஸ் காணோம்"
" இன்னும் ஒன் ஹவர்ல ஆஜர் ஆயிடுவாங்க"
ஸ்டோரி டிஸ்கஷன் மும்முரமாக சுரேஷ் உட்பட மூன்று நண்பர்கள் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
"நானும் இந்த ஸ்டோரி டிஸ்கஷன்ல கலந்துக்கலாமா" செந்தமிழ்ச் செல்வி கேட்டாள்.
" ஓ வந்துட்டீங்களா, என்று சொன்ன சுரேஷ் தன் நண்பர்களுக்கு செந்தமிழ்ச்செல்வியை, அறிமுகப்படுத்தினாள்.
" என்ன சப்ஜெக்ட்" செந்தமிழ்ச் செல்வி கேட்டாள்.
" லிவிங் டுகெதர்"
" சூப்பர் சப்ஜெக்ட்"
" கதை பண்ணிட்டீங்களா"
" ஸ்கிரீன்பிளேவே எழுதிட்டோம்"
" ஓ தட்ஸ் நைஸ்"
" சூட் எப்போ"
" அதுல தான் ஒரு சின்ன ப்ராப்ளம்"
" என்ன பிராப்ளம்"
" ஹீரோயின் தான் பிராப்ளம்"
" ஏன்"
" நேத்து வரைக்கும் நடிக்கிறேன் சொன்ன அந்த பொண்ணு , திடீர்னு கை கொடுத்துட்டா"
" அப்ப என்ன செய்யப் போறீங்க"
" புரியல டோட்டலி கன்பியூஸ்டு"
சுரேஷ், செந்தமிழ்ச்செல்வி உற்றுப்பார்த்தான்.
" நீங்க தப்பா நினைக்கவில்லை என்றால், நீங்க இந்த ஷார்ட் பிலிமுக்கு ஹெல்ப் பண்ணலாமே"
" நானா எப்படி"
" நீங்க ஏன் அந்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்கலாமே,
ப்ளீஸ்"
கொல்லென்று சிரித்து விட்டாள்.
நானா, நடிப்பு பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நடிகர் நடிகைகளை பலபேரை இன்டர்வியூ எடுத்து இருக்கிற அனுபவத்தை தவிர எனக்கு நடிப்பை பற்றி ஒன்றுமே தெரியாது.
" நீங்க ஓகே சொல்லுங்க அது எங்களுக்குப் போதும்"
" ஐ திங்க் உங்க டீம் ரிஸ்க் எடுக்கறீங்க"
" அப்ப நீங்க ஹீரோயினா, நடிக்க சம்மதிக்கிறீங்க , அப்படி தானே"
" ஒத்துக்குறேன் இப்பவும் சொல்றேன் எனக்கு நடிப்பை பற்றி ஒண்ணுமே தெரியாது"
திருச்சி மலைக்கோட்டையில் உச்சிபிள்ளையார் கோவில் அருகில் சூட்டிங் நல்ல முறையில் அரங்கேறியது.
கதாநாயகனாக சுரேஷ் கதாநாயகியாக செந்தமிழ்ச்செல்வியும் நடித்தார்கள். ஷார்ட் பிலிம் இன் பிரத்தியேக காட்சிகள் முழுவதும் எடுத்து விட்டதாக சுரேஷ் மிகவும் சந்தோஷமாக செந்தமிழ்ச்செல்வி இடம் கூறினான். வெகுசில இதர கதாபாத்திரங்களின் காட்சிகள் சென்னையில் எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினான். செந்தமிழ் செல்வி சுரேஷ் நடித்த காட்சிகள் மிக இயல்பாக வந்துள்ளதாக அவனுடைய ஷார்ட் பிலிம் இயக்குனர் மகிழ்ச்சியாக கூறினார்.
சென்னை எழும்பூர்.
" சுரேஷ் அதெல்லாம் முடியாது நீ என் வீட்டுக்கு வந்து இரண்டு நாள் தங்கிட்டு அப்புறம்தான் உங்க வீட்டுக்கு போகணும் இது என் ஆர்டர்" செந்தமிழ் செல்வி கேட்டுக் கொண்டாள்.
" ஓகே ஓகே ஓகே டன்"
" தட்ஸ் குட், தேங்க்யூ"
ஆட்டோவில் ஏறி அமர்ந்து, " நங்கநல்லூர் போங்க சார்"
" நங்கநல்லூர் ஃபுல்லா பிராமின் ஏரியா இல்ல"
" ஆமா மெஜாரிட்டி அவங்க தான்"
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் அருகில் அந்த கோல்டன் பிளாட்ஸ் மிக அழகாக காட்சி அளித்தது. இருவரும் லிஃப்டில் ஏறி மூன்றாவது தளத்தை அடைந்தனர்.
" எப்படி இருக்கு ப்ளாட்"
" ட்ரிபிள் பெட்ரூம் இல்ல, நைஸ்"
" என்ன சாப்பிடுற சுரேஷ்"
" உங்களுக்கு ஏன் சிரமம்"
" நீங்க, வாங்க, முதல்ல அதை விடு, செல்வினே கூப்பிடு"
" ஓகே செல்வி, காபி கிடைக்குமா"
" 5 மினிட்ஸ்ல"
"First-class கிளாஸ் காபி "
" உண்மையாவா சொல்ற"
" சத்தியமா"
" தேங்க்ஸ்"
" செல்வி உன்னைத் தவிர வீட்ல யாரும் இல்லையா"
" ஓ! என் பர்சனல் உனக்கு நான் சொல்லல இல்ல, நான் ஒரு டிவோர்சீ. அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு. அப்பா ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். அப்பா ஒரு ஆஸ்துமா பேஷன்ட். ரொம்ப நல்லவரு. அவர் ஒரு மேக்ஸ் டீச்சர். சின்சியரா பசங்களுக்கு மேக்ஸ் சொல்லித் தருவார். அவர்கிட்ட படிச்சவங்க எல்லோரும் சென்டம் அடிப்பாங்க. அப்பான்னா எனக்கு உயிர். ஜேர்ணலிஸ்ட்ட வேலை செய்யும்போது தான் அந்த புரோபோசல் அப்பாவுக்கு வந்தது. அப்பாவோட பெஸ்ட் பிரெண்டோட பையன். என் கிட்ட கேட்டாரு. அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கவே நான் ஒத்துக்கிட்டேன். ரொம்ப பிராங்கா சொல்றேன், ஃபர்ஸ்ட் நைட்லேயே, அவன் ஒரு சாடிஸ்ட் என்று புரிந்து கொண்டேன்.
அப்பாவுக்காக ஆறு மாசம் தாக்கு புடிச்சேன், அவன் போக்கு மாறவே இல்லை, ரொம்ப மோசமா என்ன நடத்தினான், சிகரெட்டால் என் மார்பகத்தில் நான் தூங்கும்போது பலதடவை சுட்டு இருக்கான். ஒரு கட்டத்துக்கு மேல அவனோட வாழறது சரி இல்ல என்று முடிவு பண்ணி, அப்பாகிட்ட சொல்லி டைவர்ஸ் அப்ளை பண்ணி, டைவர்ஸ் வாங்கிட்டேன். அப்பா ரொம்ப பீல் ஆயிட்டார். அவருடைய ரிட்டயர்மென்ட் லைப் என்னால ரொம்ப ஸ்பாயில் ஆயிடுச்சு. என்ன நினைச்சு அவரு உடம்ப கெடுத்துக்கினார். ஆறு மாசத்துக்கு முன்னாடி அப்பா இறந்துட்டார். அம்மா நல்லா தான் இருக்காங்க. இப்ப அவங்க நார்த் இந்தியா டூர்ல இருக்காங்க. சாரி என் கதையை சொல்லி காலையிலேயே உன்ன சோகமான மூடுக்கு கொண்டு வந்துட்டேன்"
செந்தமிழ் செல்வியின் கதையை கேட்ட சுரேஷ் பெருமூச்சுவிட்டான். இவளுக்கு பின்னாடி இவ்வளவு சோகம் இருக்கா உண்மையில் மனம் வருந்தினான்.
" நீ எப்பவுமே மேல் ( male), அதாவது டாம் பாய் போலதான் காட்சியளிப்பியா"
" எனக்கு மேல்( male) மேனரிசம் ரொம்ப பிடிக்கும், டீன் ஏஜ்ல இருந்தே இப்படி தான்"
" சரி சுரேஷ் உனக்கு கல்யாண ஆயிடுச்சா"
" இல்ல தங்கை இருக்கா , அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு தான் எனக்கு"
" அப்ப உனக்கு ஒரு கமிட்மண்ட் இருக்குன்னு சொல்லு"
" என்னால முடிஞ்ச ஒரு கமிட்மெண்ட்"
" சுரேஷ் நான் பாட்டுக்கு இரண்டு நாள் உன்ன இங்க தங்க சொல்லிட்டேன் ஆனால் உன்னுடைய சுதந்திரத்தில, தலையிட மாட்டேன் நீ தாராளமா தம், தண்ணி அடிக்கலாம் நோ அப்ஜெக்ஷன்"
" தம் உண்டு, தண்ணி அக்கேஷனலா"
" தம், என்ன பிராண்ட்"
" கோல்டு பிளாக் கிங் சைஸ்"
" எனக்கு பிடித்த பிராண்ட்"
" நீங்க தம் அடிப்பீங்களா"
" ஜர்னலிஸ்ட்டா இருக்கும்போது, ஒருத்தி எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட் அவ பழக்கப்படுத்தினா, கல்யாணத்துக்கப்புறம் சுத்தமா விட்டுட்டேன், அப்பா இறந்த பிறகு மீண்டும் ஆரம்பிச்சேன், சோகத்துல ரொம்பவே தம் அடிச்சேன். இப்ப ரொம்பவே கண்ட்ரோல் பண்ணிட்டேன்."
" தப்பா நினைக்கலைன்னா"
" தைரியமா கேளு சுரேஷ்"
" அப்ப தண்ணி அடிக்கிற பிழக்கும்"
" ரெண்டு தடவை டெஸ்ட் பண்ணி இருக்கேன். அது என்னமோ எனக்கு பிடிக்கல"
" செல்வி நான் ஒன்னு சொல்லட்டுமா யூ ஆர் வெறி பிராங்க்"
" தேங்க்ஸ் ஆனால் இது தான் நிறைய பேருக்கு பிடிக்கல, அதப்பத்தி நான் கவலைப்படவில்லை, என்ன பொறுத்த வரைக்கும் தப்ப தட்டி கேட்கனும், நிறைய நியாயமான உதவி செய்யனும், மத்தவங்க மெச்சிக்க நான் எப்பவுமே வாழமாட்டேன், எனக்கு என்ன பிடிக்குமோ அது படி வாழ்வேன். அதுல சில சமயம் தப்பு இருக்கும், தப்பை தொடர மாட்டேன். வாழ்க்கையல சவால் எனக்கு ரொம்ப படிக்கும்"
" உன் பேச்சுல தைரியம் மட்டுமல்ல, நல்ல தெளிவு இருக்கு. அது எனக்கு ரொம்ப படிச்சிருக்கு. சரி செல்வி,மதியம் என்ன சமையல் செய்ய போற செல்வி"
" நீ நான்- வெஜ் சாப்பிடுவ இல்ல"
" கண்டிப்பா, ஓடறது, பறக்குறது எல்லாம் ஒரு வெட்டு வெட்டுவேன்"
" அப்ப இன்னைக்கு ஆட்டு கறி புலவ் செய்யறேன்"
" புலவுன்னா தம் கட்டனும் இல்ல"
" ஆமா"
" முஸ்லிம் மக்கள் செய்வாங்களே, அதே மாதிரி செய்வியா"
" செய்வேன், புலவ் செய்து காட்றேன், டேஸ்டு பண்ணிட்டு சொல்லு, டிரடிஷனல்(traditional)( பாரம்பரிய) முஸ்லிம் புலவ் மாதிரியே இருக்கா , இல்லயான்னு"
செல்வி கூறியவாறு, புலவ் மிக, மிக அருமையாக இருந்தது. சுரேஷ் ஒரு வெட்டு வெட்டினான். செந்தமிழ் செல்வி சமையல் கலையிலும் வல்லுனர் என பாராட்டினான்.
ஒரு வாரம் கழிந்தது.
செந்தமிழ் செல்வியின் மொபைல் போன் அலறியது.
" சொல்லு சுரேஷ்"
" செல்வி நம்ம நடிச்ச ஷார்ட் பிலிம் யூடியூப்ல இதுவரைக்கும் 1 லேக்( ஒரு லட்சம்) வியூஸ்"
" ரியலி"
" நீ நம்பலைன்னா லிங்க் அனுப்புறேன் உடனே பாரு"
" நீ சொன்னா நம்பறேன்"
" செல்வி உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும் இன்னிக்கி சாயந்திரம் மெரினா பீச் காந்தி சிலை கிட்ட ரெண்டு பேரும் மீட் பண்றோம்."
" எனிதிங் ஸ்பெஷல்"
" எஸ் வெரி ஸ்பெஷல்"
சொல்லி வைத்தாற்போல் மாலை ஆறு மணிக்கு காந்தி சிலை முன் இருவரும் சந்தித்தனர். அப்படியே இருவரும் மெரினாவில் மணல் பரப்பில் வெகுதூரம் நடந்து ஏறக்குறைய கடற்கரை அருகில் அமர்ந்தனர். ஏறக்குறைய, பத்து நிமிட மௌனத்திற்கு பிறகு சுரேஷ் மௌனம் கலைத்தான், " செல்வி, ஐ லவ் யூ"
சுரேஷ் அந்த வார்த்தைகளை சொன்னவுடன், செந்தமிழ்ச்செல்வி கலகலவென சிரித்துவிட்டாள். அவளால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை. வெகுநேரம் சிரித்தாள். பிறகு சுரேஷை பார்த்து "உனக்கென்ன பைத்தியமா, முதல்ல இந்த எண்ணத்தை உன் மனசுல இருந்து அழித்துவிடு. நம்ம ரெண்டு பேரும் குட் ஃப்ரெண்ட்ஸ். அவ்வளவுதான். கல்யாணம், லவ்வு, அதெல்லாம் வேண்டாம் . பாரு நீ லவ்வுன்னு
சொல்ல ஆரம்பிக்கும்போதே எவ்வளவு பதட்ட படர. சோ, புட் ஃபுல் ஸ்டாப் பர் லவ். நீ ஏன் தெரியுமா என்ன லவ் பண்றேன்னு சொன்ன, என் மேல உனக்கு சிம்பதி( sympathy), சுரேஷ்,வி வில் கண்டினியு அஸ் பிரண்ட்ஸ், இத மாதிரி இன்னொரு தடவை என்கிட்ட சொல்லாதே".
சுரேஷ் செந்தமிழ்ச்செல்வி பேசியதை கேட்டு அதிர்ந்து போனாள். ஆச்சரியமுற்றான். என்ன ஒரு தெளிவான பெண். நாம் தான் அவசரப்பட்டு விட்டோம். மனதுக்குள் கூறிக் கொண்டான்.
" செல்வி, ஆயம் வெரி சாரி, பட் உன் பியூச்சர்"
" அது என் கையில தான், நிச்சயமா நான் ரொம்ப காலத்துக்கு இப்படி சிங்கிள் ஆகவே இருக்கமாட்டேன். அதுக்கு ஒரு காலம் வரும் அப்போ, எனக்கு ஏத்தவணா லைஃப் பார்ட்னரரா நிச்சயம் செலக்ட் பண்ணுவேன். கொஞ்ச நாள் இந்த வாழ்க்கையை வாழ்வோமே . அப்படி யாருமே எனக்கு கிடைக்கலன்னா காலத்து கிட்ட என்ன கம்ப்ளீட்டா ஒப்படைத்து விடுவேன். நதி மாதிரி பயணம் செய்வேன். ஆதான் பணம் நிறைய இருக்கே, அப்புறம் என்ன பரதேசி மாரி ஊரு ஊரா நாடு நாடா சுத்த வேண்டியதுதான் அதுவும் நல்லாதானே இருக்கும்"
" உண்மை சொல்லவா செல்வி, நீ ரொம்ப, ரொம்ப வித்தியாசமான, உண்மையான, மனிதநேயமுள்ள, தைரியமான, காலத்துக்கு தேவையான ஒரு திறமையான பெண்"
" அங்க பாரு ஒரு போலீஸ் மாமா, லவ் பண்றவங்கல மிரட்டி, காசு வாங்கறாறு, அவருக்கு ஒரு சின்ன ட்ரீட்மென்ட் கொடுக்கிறேன் பாரு"
" நீ உண்மையிலேயே ஒரு புதுமை பெண்"
"தப்பா சொல்ற சுரேஷ், நான் எதார்த்தமான பெண்"
- பாலு.