அவள் கேட்டாள் என் பதில்

மாலை வாராத வெறும் காலைப்பொழுதே இருந்தாலோ
மாலையே தங்கி இரவு வாராது போகினும்
காலை மாலை இரண்டும் இல்லாது
வெறும் இரவே இருந்துவிட்டால் வாழ்வு
என்னாகும் எப்படி இருக்கும் கொஞ்சம்
சிந்தித்துதான் சொல்லுங்கள் பாப்போம் என்றாள்
அவள் .... 'நீயில்லாத வாழ்வுபோல ஆகுமே'
என்றேன் அப்படியே மனதில் வந்ததை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-May-21, 8:51 pm)
பார்வை : 144

மேலே