எப்போது நீ வருவாய் என் அன்பே

அன்பே

மஞ்சள், நீலம்,ரோஸ் வண்ணங்களின் கலவையில் குளித்து தன் நிறத்தை இழந்து கொண்டிருந்தது கதிரவன்!

பேனாவில் இருந்து கொட்டிபோன மையாக அடர்நீலமானாய் மாறி போனது வானம்!
அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்மினி பூச்சியாய் மின்னி கொண்டிருந்தது விண்மீன்!

மாலை தென்றல் மெல்ல மெல்ல என் ஸ்பரிசத்தில் புது ராகம் மீட்டி சென்றது!

நேரம் மெதுவாக நகர்ந்தது!
நொடிபொழுது கனமாக ஆனது!

வானம் புதிதாக தெரிந்தது!
வாழ்வும் உன்னை எண்ணி கழிந்தது!

எப்போது நீ வருவாய் எண்ணி காத்திருக்கிறேன்!

கிழக்குதிசையிலே கீற்று வீசி பிரவேசிக்கிறாய்!

தங்கதட்டாய் ஜொலிக்கிறாய்!

இன்று ஏனோ மிகவும் மினுமினுக்கிறாய்!

தரிசனம் தந்துவிட்டாய் நிலா பெண்ணே!

தங்கமே இனி தேவையில்லை என் கண்ணே!

எழுதியவர் : சுதாவி (27-May-21, 9:21 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 355

மேலே