இயற்கை பேரழிவை உணர்வோம் பாடல்

பல்லவி-1
நாலு பக்கம் பூமி அதுல மூணு பக்கம் கடலு,
செயற்கை கோளவிட்ட மனுஷன் செத்து போன உடலு,
பழத்தை தின்னு கொட்ட போட்டா மரமாகி வந்து நிக்கும்,
காட்ட அழிச்சி ரோட்ட போட்டா ஆக்சிஜனு எப்படி கிடைக்கும்.
சரணம் -1
4ஜி 5ஜி டெக்னாலஜி கேக்கலிங்க அப்பாலஜி,
பயாலஜி வைராலஜி பேலன்ஸ் இல்லா எக்காலஜி
வைரசுக்கு வேக்சினு போடுறாங்க ஸ்பாட் பைனு
பல்லவி-2
நாலு பக்கம் பூமி அதுல மூணு பக்கம் கடலு,
செயற்கை கோளவிட்ட மனுஷன் செத்து போன உடலு,
பழத்தை தின்னு கொட்ட போட்டா மரமாகி வந்து நிக்கும்,
காட்ட அழிச்சி ரோட்ட போட்டா ஆக்சிஜனு எப்படி கிடைக்கும்.
சரணம் -2
விழுந்த மரத்தை அப்புறப்படுத்த காண்ட்ராக்ட்டு எடுக்குறான்
நல்ல மரத்தையும் வெட்டிஎடுக்க கமிஷனையும் கொடுக்குறான்
மண்ணெல்லாம் அரிச்சி போச்சி காத்து கூட காசா ஆச்சி
எங்க பாரு ரயில்வே ஸ்டேஷன் அங்க பாரு அர்பன் ஸ்டேஷன்
பல்லவி-3
நாலு பக்கம் பூமி அதுல மூணு பக்கம் கடலு,
செயற்கை கோளவிட்ட மனுஷன் செத்து போன உடலு,
பழத்தை தின்னு கொட்ட போட்டா மரமாகி வந்து நிக்கும்,
காட்ட அழிச்சி ரோட்ட போட்டா ஆக்சிஜனு எப்படி கிடைக்கும்.
சரணம்-3
ஏரி குளம் குட்ட இப்போ வீடுகளா ஆகிடுச்சு
வாயில்லாத ஜீவனெல்லாம் சாபமிட்டு போயிடுச்சி
குரங்கிலிருந்து பொறந்த மனுஷன் தன்ன தானே அழிச்சிக்கிட்டான்
தன்ன தானே கடவுளுனு போக போக நினைச்சுகிட்டான்
பல்லவி-4
நாலு பக்கம் பூமி அதுல மூணு பக்கம் கடலு,
செயற்கை கோளவிட்ட மனுஷன் செத்து போன உடலு,
பழத்தை தின்னு கொட்ட போட்டா மரமாகி வந்து நிக்கும்,
காட்ட அழிச்சி ரோட்ட போட்டா ஆக்சிஜனு எப்படி கிடைக்கும்.
கவிஞர்-வி.ர.சதிஷ்குமரன்

எழுதியவர் : வி.ர.சதிஷ்குமரன் (28-May-21, 9:01 am)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 19

மேலே