ஒரே வரியில்
ஒரே வரியில்
மேகம் - மேயும் வானம்
- வான் மூடியசேலை
கார் மேகம் -
பெண்ணின் கூந்தலை இரவல் வாக்கிய வானம்
மழைத்துளி
- புவியில் விழும் தாரைகள்
மழை
- வானருவி
- மேகத்தின் கண்ணீர்
- தேம்பி அழும் வானம்
அடைமழை
- தொடர் மழை
- உடைந்த வான்மடை
- வானம் அடம்பிடிக்கிது
பூமி அழுகின்றது
பூமி –
- உன்னை சுமக்கும் சாமி
- பிரபஞ்சத்தின் மிதவைப்பந்து
-
புயல் - புனலின் சீற்றம்
- பொய்கிய காற்று
- புறப்பட்டுவந்த பெரும் காற்று
- மரங்களோடு மல்யுத்தம்
- மனதோடு பெரும் யுத்தம்
நட்சத்திரங்கள் -
விண்விளக்குகள்
- வானில் உதிர்ந்த
வெள்ளைப்பூக்கள
- விண்ணில் ஜொலிக்கும் மத்தாப்பூக்கள்
- வானில் வலம் வரும் மின்மினி பூச்சிக்கள்
- வானில் முளைத்த
முல்லைப் பூச் சரம்
- வானில் பூத்த காகிதப்பூக்கள்
நிலவு -
வானின் வாடகை விளக்கு
- வானில் உலா வரும் வண்ண ரதம்
- புவியின் விளக்கு
- புவி இட்ட பொட்டு
நினைவு
நித்திறையில் வந்து வீசிய வசந்தமும் புயலும்
- மறையாத மனக்கனவு
கவிதை படைப்பு
கவிஞனின்
கர்பவலி
முதல் காதல்
- முடியாத மோதல்
நீர் இல்லாத ஓடை
- நீ உடுத் தாத ஆடை
கசங்கிய இதயம்
- கண்ணீர்த்துளிக்குள் இதயத்தின் தேடல்
அவலம்
- துயரத்தின் தூரல்
- துன்பத்தின் தேடல்
- துக்கத்தின் திணரல்
- கவுனைபோட்டால் கலவு போய்விடுவாய்
கவனம்
கேவலம் - அசிங்கத்தின் ஆடை
- ஆசையின் வாடை
அருவருப்பு
- அருகில்போக முடியாமல் கசப்பு
- அரும்பும் வெருப்பு
-
பிடிவாதம்
- உன்னைப்பிடித்த வாதம்
- வதம்
வியர்வை
உழைப்பாளினின் வற்றாத வறுமை நதி
பனித்துளிகள்
- புவிமேல் விழுந்த உயிர்த்துளிகள்
- குளிர் பனியின் வேர்வைகள்
சாதி மதம்
- என்றோ பூசிய அரிதாரத்தை கழுவாமல் இருக்கும் சமுதாயம்
சாதி - சதியாகளாமா
மதம் - மிதமாக இல்லாதல் மதம் பிடித்ததேன்
வண்ணத்துப்பூச்சி
- வண்ணக் கலவையை பூசி வலம் வரும் பூச்சி
- வண்ணத்துப்புச்சி சிறகில் வரைந்தது யார்.
ஊனம்
- பிரம்மணின் படைப்பில் கவனக்குறைவு
கிறுக்கள்
- உதிக்காத சிந்தனை
- புரியாத பிதற்றல்
துக்கம்
- சோகத்தின் பரிசு
தூக்கம்
- சுகத்தின் பரிசு
- உழைப்பின் பரிசு
- இரவின் தவிப்பு
சோகம்
- அழைக்காத கொடுங்கோல்வாதி
- அணைக்காத அன்பு
வசந்தகாலம்
- வந்தே பூக்கும் அதிசயம்
காதல்
- எழுதியது இதயம்
கடிதம்
- எழுதியது கரம்
விவசாயம்
- வெறிச்சோடிய சாயம்
- புவியின் பண்டக சாலை
- வியர்வைத்துளிகள் விதைத்த வேளாண்மை
மின்னல்
- மேகத்தின் காதல் மோதல்
மழை
- விண்ணின் கண்ணீர் துளிகள்
தேய்ந்து போன கீதம்
- தேசிய கீதம்
மானிடன்
- மிருகமாகதவரை
சிறகுகள்
- பறக்கத்துடிக்கும் பறவை
திருநங்கை
- பிறப்பின் பிழை
அந்திவானம்
- பந்திவிரிக்க பிந்தி வந்த மேகம்
பாலியல் படுகொலை - முளைக்குமுன் சிறைவாசகமா -
கரைபடிந்த கருப்புச் சூரியன்
அரசியல்
பேப்பரில் ஒட்டவில்லை மை
- - சிந்தனைத் தடுமாற்றம்
விழிக்குள் விழுந்த
கருப்புச் சூரியன் -
- இவளாகிய கண்கள்
இடமாறிய இதயம் - காதல்
தடுமாறிய கால்கள் - ஏக்கம்
கண்ணீர்த்துளிகள் -
உப்பு மழை
பிரிவின் சொந்தம்
சோகம்
நீரோடை
தடம் தெரியாத
ஓடை
அவலம்
அறைகுறை ஆடை
பெண்ணின் காதல்: புரியாத தேடல்
- காலையில் உதித்தாள்
மாலையில் மறைந்தாள்
நிறைவேறாத காதல்-
காதல் கரு வை கலைத்தால்
கல்யாணத்திற்காக
- பக்கம் பக்கம் எழுதிய கவிங்கனுக் கே ஆச்சரியம்
மதிப்பு
- எண்களைத் தொடரும் பூஜுயம்
- மானம் காக்கும் தவிப்பு
ஜனனம் -
புவிக்கு வந்த புதுவரவு
மரணம்
நிறந்தற உறக்கம்
டாஸ்மார்க்
அரசு அங்கிகரித்த சவக்கிடங்கு
குற்றம்
துணிந்த செய்த தவறு
தரிசனம் - கரிசனம்

