சண்ட மாருதம் பொழிந்திடுஞ் சாரதாம் பிகையே - கலித்துறை
கலித்துறை
(மா கூவிளம் விளம் விளம் மா)
அண்டம் யாவையும் படைத்தளித் தழிக்குமுத் தொழில்கைக்
கொண்ட பேரருட் கொண்டலே யுள்ளகங் குழைந்து
தொண்டு பூண்டவர் நாவினிற் கவிநலஞ் சுரக்கச்
சண்ட மாருதம் பொழிந்திடுஞ் சாரதாம் பிகையே! 33
- ஸ்ரீகாலடிச் சாரதாம்பிகை மாலை

