கெஞ்சிக் குருவின் வித்தையைக்கொள் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

அஞ்சில் வளையா ஐம்பதிலா வாங்கு வளையுஞ் சொல்லிடுவீர்;
பிஞ்சில் பழகும் வித்தையினை பேதை நீரும் அறிவீரோ?
அஞ்சிப் பழக உதவுமாசொல் ஐயன் மீரே சிந்திப்பீர்;
கெஞ்சிக் குருவின் வித்தையைக்கொள் கேட்கும் அனைத்துங் கிட்டிடுமே!

- வ.க.கன்னியப்பன்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தின் முதல் பாதி வஞ்சி விருத்தமாக திரு.பழனிராசன் இயற்றியது!

கல்வி
வஞ்சி விருத்தம்
(மா மா காய்)

அஞ்சில் வளையா ஐம்பதிலா
பிஞ்சில் பழகும் வித்தையினை
அஞ்சிப் பழக உதவுமாசொல்
கெஞ்சிக் குருவின் வித்தைக்கொள்! - பழனிராசன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-May-21, 8:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே