உனக்காக ஒரு....

👏👏👏👏👏👏👏👏👏👏👏

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

👏👏👏👏👏👏👏👏👏👏👏

இளைஞனே!
சாதித்தவனுக்குக்
கைத் தட்டியே
நீ சாக வேண்டுமா?
உன் சாதனைக்காக
ஒரு கையாவது தட்ட வேண்டாமா?

சாதிக்க முடியவில்லை
என்பதற்கு
ஏதாவது
ஒரு காரணத்தை சொல்லி
உன்னை
சமாதானப்படுத்திக் கொள்கிறாய் ..

நீ சொல்லும்
முதல் காரணம் வறுமை....

வறுமை என்பது
பணத்தைப் பொறுத்தது அல்ல
அது மனதைப் பொறுத்தது....

சாதிப்பதற்கு வளமும்
சாதிக்க முடியாதற்கு வறுமையும் காரணம் என்றால் ......

ஒருவேளை
உணவைக் கூட
சரியாக சாப்பிட முடியாத புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
ஒரு மாநிலத்தின்
முதலமைச்சர் ஆனது எப்படி....?

ஏழ்மையான
மீனவர் குடும்பத்தில்
ஏழையாய் பிறந்த
அப்துல் கலாம்....
இந்திய திருநாட்டின்
குடியரசு தலைவர்
ஆனது எப்படி ....?

வறுமை என்பது
ரேஷன் கார்டிலும்
வருமானச் சான்றிதழில் மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும் வறுமைக்கோடு
உன்னை சுற்றி
இல்லாமல் இருக்கட்டும்.....

இரண்டாவது காரணம்
அழகு..
அழகிற்கு
முக்கியத்துவம் கொடுக்கும்
திரைப்பட உலகில்
கொடிகட்டிப் பறந்தவர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
புரட்சி கலைஞர் விஜயகாந்த்
கருப்புதான்...
அழகை விட சிறந்தது
திறமை அறிந்துகொள்.....

மூன்றாவதுகாரணம்
உருவம் .....

குள்ளமான
சச்சின் டெண்டுல்கர்
விளையாட்டில்
சாதித்ததை விட.....
பெருந்தலைவர் காமராஜர்
அரசியலில்
சாதித்ததை விட
உயரமான
எவரும் சாதிக்கவில்லை......!

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்...
முயற்சி திருவினையாக்கும்.... முயன்றால் முடியாதது இல்லை.... முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்....
என்ற வரிகளை
வாசித்துப் பார்த்தால்
உனக்கு புரியாது .....
மனப்பூர்வமாக நேசித்து பார்
நிச்சயம் சாதிப்பாய்....!!!

*கவிதை ரசிகன்*

👏👏👏👏👏👏👏👏👏👏👏

எழுதியவர் : கவிதை ரசிகன (30-May-21, 7:50 pm)
Tanglish : unakaaga oru
பார்வை : 49

மேலே