ஓரே ஒரு நாள்....

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰


*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

நமக்காக
எத்தனையோ முறை
அழுதிருக்கிறோம்.....
மற்றவர்களுக்காக
எத்தனை முறை
அழுதிருக்கிறோம்?

நம்மை
எத்தனையோ முறை
சந்தோஷப்படுத்தி இருக்கிறோம்... அடுத்தவர்களை
எத்தனை முறை
சந்தோஷப்படுத்தி இருக்கிறோம்?

நமக்காக
எத்தனையோ முறை
பொருள் வாங்கி இருக்கிறோம்.... மற்றவர்களுக்காக
நீ எத்தனை முறை
பொருள் வாங்கி இருக்கிறோம்...?

நமக்காக
எத்தனையோ முறை
இரவில் உறங்கியிருக்கிறோம்....
மற்றவர்களுக்காக
எத்தனை முறை
விழித்திருக்கிறோம்..?

நாம்
எத்தனையோ முறை
சரித்திரிக்கிறோம்...
மற்றவர்களை
எத்தனை முறை
சிரிக்க
வைத்திருக்கிறோம்...?

நமக்காகவே
ஒவ்வொரு நாட்களும்
வாழ்கிறோம்
ஒரு நாட்களாவது
நீ பிறருக்காக
வாழ்ந்துப் பார்ப்போமே..!

* *கவிதை ரசிகன்*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-May-21, 6:56 pm)
பார்வை : 100

மேலே