காதல் வைரஸ்.....

📺📺📺📺📺📺📺📺📺📺📺

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

📺📺📺📺📺📺📺📺📺📺📺

வெள்ளித்திரையை மட்டுமே தொற்றிக் கொண்டிருந்த
காதல் வைரஸ் .....
இப்போது
சின்னத்திரை
தொடர் நாடகத்திலும் தொற்றிக்கொண்டது......!

வீட்டிற்கு வெளியே பரவிக்கொண்டிருந்த
காதல் வைரஸை
மெல்ல மெல்ல
வீட்டுக்குள்ளேயே
பரப்பி விட
தொடங்கியுள்ளது.......!

ஓடிக்கொண்டிருப்பது
கற்பனை
நாடகம் தானே என்று
பார்த்துக் கொண்டுள்ளனர் ....
நாளை
அதுவே
நம் வீட்டிலும்
நிஜமாக நடக்கலாம்
என்பதை அறியாமல்....

ஓர் ஆண் பிள்ளையை
இரண்டு பெண் காதலிப்பதும்....
ஒரு பெண் பிள்ளையை
இரண்டு ஆண் காதலிப்பதும்தான்
இன்றைய நாடகத்தில்
கதையின் கரு.....
இதனால்
அழிகிறது
நமது கலாச்சாரத்தின் கரு...

காதலிப்பது தப்பில்லை
என்ற எண்ணத்தை...
பிள்ளைகளின் மனதில்
அஷ்திவாரம் போட்டு எழுப்புகிறது
இன்றைய
தொடர் நாடகங்கள்.....

அன்று....
கல்லூரி
படிக்கும் வயதில் தான்
ஓடிப்போய்
காதல் திருமணம் செய்வார்கள்.... இன்று .....
பள்ளி படிக்கும் வயதிலேயே பறந்துபோய்
கள்ள திருமணம் செய்கிறார்கள்....!

பெண் பிள்ளையை
பெற்றவர்கள் மட்டுமல்ல
ஆண்பிள்ளையைப் பெற்றவர்களும்
மடியில் நெருப்பைக்
கட்டிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்.....!!!

இந்த காதல் வைரஸை ஆரம்பத்திலேயே
தடுக்க வில்லை எனில் ....
கொரனோ வைரஸ் போல்
பல கோடி
பிள்ளைகளின்
"வாழ்க்கையை"
கொன்று குவித்து விடும்......!

*கவிதை ரசிகன்*

📺📺📺📺📺📺📺📺📺📺📺

எழுதியவர் : கவிதை ரசிகன் (31-May-21, 7:21 pm)
Tanglish : kaadhal virus
பார்வை : 46

மேலே