நந்தவனமும் கள்ளிச்செடியும்

ஒருமந்தையிலிருந்து
இரு ஆடுகள் பிரிவது போல்
நீயும் நானும் பிரிந்து போனோம்
அன்று...

நான் போன திசையில்
கள்ளிச்செடிகளும்
பாறாங்கற்களும்
மலைமுகடுகளும்தான்...

கள்ளிச்செடிகளில் உரசி
பாறாங்கற்களில் தட்டிவிழுந்து
மலை முகடுகளில் முட்டிமோதி
அண்ணாந்து ப் பார்க்கையில்
அமைதியாய் சிரிக்கிறாய்,
வானில் நின்றுநீ!

இது எப்படி நடந்தது?
இது எப்படி சாத்தியம்?
நீ எப்படி அங்கே?
நீ போகும்பாதை நந்தவனம்
என்றுதானே உன்னை
என்னுடன் அழைதது
செல்லவில்லை...

நந்தவனம் உனக்குக்
கந்தகவனமாக மாறியதா?
அங்கே இருந்த
மலை முகட்டில் ஒருவேளை
முட்டி மோதி உடைந்து விட்டாயா?

உன் சாவு,
குருதியின் சிவப்புமை
கொண்டு எழுதப்பட்டதா?
இல்லை,
கொரோனாவின் சளித் துகள்கள்
கொண்டுவரையப்பட்டதா,?
கூறடி என் பெண்ணே!
அடி கண்ணே!
______________________________________

எழுதியவர் : ரோகிணி (31-May-21, 8:14 pm)
சேர்த்தது : Rohini
பார்வை : 71

மேலே