மலரும் சருகும்
 
 
            	    
                காற்றின் சலனத்தில் 
சருகுகளின் ஓசை 
மலரோ மௌனத்தில் 
அழகின் தவத்தில்    
உலர்ந்த சருகுகள் ஓசையில் 
உதிரா மலர் அழகினில்
நாளை நானும் உன்னோடுதான் 
மெல்லச் சொன்னது மலர் 
பனிப்பொழிவில் சிலிர்த்தது மலர் 
பனிப்பொழிவிலும் உணர்ச்சியின்றி சருகுகள்
 
                     
	    
                

 
                             
                            