மெத்தனம் கூடாது

" *மெத்தனம் கூடாது"*

நேற்று போட்ட ஊசியாலே
...நின்று போச்சா தொற்றுனக்கு ?
சேற்றில் விழுந்து மூழ்காது
... சிப்பாய் உன்னை காப்பாற்ற
சேற்றை வாரிப் பூசிவிட்டால்
... சேரும் நாற்றம் மணந்திடுமா?
தோற்றே ஓடும் கிருமிகளும்
...தொட்டால் தொற்றும் கவனம்வை.

( *அறுசீர்க் கழிநெடில்*
*ஆசிரிய விருத்தம்* )

(தடுப்பூசி போட்டுக் கொண்டால் ...கொரோனா தொற்று தாக்காதா?....என்றே பலர் கேட்கின்றனர்.
தொற்று மீண்டும் தாக்கலாம்...ஆனால் இறப்பு போன்ற பெரும் இழப்புகளோ, மருத்துவமனையில் சேர்த்துப் பார்க்கும் சூழலோ வராது.
அந்த விசயத்தில்... தடுப்பூசி அவசியமே)

மரு.ப.ஆதம் சேக் அலி (PASALI)

எழுதியவர் : PASALI (3-Jun-21, 8:57 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 60

மேலே