கவிதை என்றால் என்ன

கவிதை என்றால் என்னவென்று
கேள்வி கேட்ட வாசகர் ஒருவருக்கு
எனது சிந்தனையில் தோன்றிய
விளக்கம் என்னவென்றால் ..!!

கதையாக சொல்ல
வேண்டிய கருத்தினை
மனதில் உள்வாங்கி .
கவிதை படைக்க வேண்டும் ..!!

கவிதையின் வார்த்தைகள்
பொதிகைமலை தென்றலாக
வாசகர்களின் நெஞ்சங்களில்
மென்மையாக நுழைந்து ...!!

கவிதையை வாசித்தவுடன்
அந்த கவிதையின் தாக்கம்
உறங்காத கடல் அலைபோல்
எழுச்சியுடன் வாசகர்களின்
நெஞ்சங்களில் வீசிக்கொண்டே
இருக்க வேண்டுமென்று
விளக்கம் சொன்னேன் ..!!

இலக்கிய உலகத்தில்
வாழும் என் இனிய நண்பர்களே
என் விளக்கம் சரிதானே ...??...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (3-Jun-21, 11:55 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 334

மேலே